உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆன்லைனில் வாங்கிய ஐஸ்கிரீமில் பூரான் இருந்ததால் பெண் அதிர்ச்சி

ஆன்லைனில் வாங்கிய ஐஸ்கிரீமில் பூரான் இருந்ததால் பெண் அதிர்ச்சி

நொய்டா: புதுடில்லி அருகே நொய்டாவில், 'ஆன்லைன்' வாயிலாக வாங்கிய ஐஸ்கிரீமில் பூரான் இருந்தது குறித்து உணவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள செக்டர் - 12ல் தீபா என்பவர் வசித்து வருகிறார். இவர், 'பிளிங்கிட்' ஆன்லைன் செயலி வாயிலாக குடும்பத்தினர் அனைவரும் உண்ணும் வகையிலான 'பேமிலி பேக்' ஐஸ்கிரீம் ஒன்றை நேற்று வாங்கினர். அமுல் நிறுவனத்தின் தயாரிப்பான அந்த ஐஸ்கிரீமை பிரித்து பார்த்த தீபா, அதில் இறந்த நிலையில் பூரான் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதையடுத்து, அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.உடனடியாக, தீபாவை தொடர்பு கொண்ட பிளிங்கிட் நிறுவனம், ஐஸ்கிரீமிற்கான பணத்தை திருப்பித் தந்தது. அதேசமயம், அந்த வீடியோவை பார்த்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், தீபாவிடம் விசாரணை நடத்தியதுடன், செக்டர் - 22ல் உள்ள ஐஸ்கிரீம் அனுப்பப்பட்ட நிறுவனத்தின் கிடங்கிலும் சோதனை நடத்தினர். அங்கு, வைக்கப்பட்டிருந்த ஐஸ்கிரீம்களின் மாதிரிகளை எடுத்து சோதனைக்கு அனுப்பினர். ஐஸ்கிரீம் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இடம் சுகாதாரமாக இல்லாததை அடுத்து, அது குறித்து ஆன்லைன் நிறுவனத்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சம்பந்தப்பட்ட அமுல் ஐஸ்கிரீம் நிறுவனமும், பிளிங்கிட் நிறுவன நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகிறது. மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் வாங்கிய ஐஸ்கிரீமில் மனித விரல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட அடுத்த சில நாட்களில், நொய்டா ஐஸ்கிரீமில் பூரான் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை