| ADDED : ஏப் 13, 2024 05:41 AM
ஷிவமொகா: மஹா கணபதி ரத உற்சவத்தில், வாழைப்பழத்தின் மீது மோடி மற்றும் ஈஸ்வரப்பா பெயர்களை எழுதி, ரதத்தின் மீது ஆதரவாளர்கள் வீசியெறிந்தனர்.ஷிவமொகா லோக்சபா தொகுதியில், பா.ஜ., வேட்பாளராக ராகவேந்திரா போட்டியிடும் நிலையில், இவரை எதிர்த்து ஈஸ்வரப்பா சுயேச்சை வேட்பாளராக களமிறங்கி உள்ளார். இந்நிலையில் ஷிவமொகா சாகராவில் நேற்று மஹா கணபதி ரத உற்சவம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த விழா ஆறு நாட்கள் நடக்கும். பொதுவாக ரத உற்சவத்தின் போது, பக்தர்கள் வாழைப்பழத்தின் மீது, தங்களின் வேண்டுதல்களை எழுதி, ரதத்தின் மீது வீசினால், வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.நேற்று காலையில் ரத உற்சவம் நடந்த போது, வாழைப்பழத்தின் மீது பிரதமர் மோடி மற்றும் ஈஸ்வரப்பாவின் பெயரை எழுதி, ரதத்தின் மீது வீசி, அவரது ஆதரவாளர்கள் பிரார்த்தனை செய்தனர்.