யெச்சூரி கவலைக்கிடம்
புதுடில்லி, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் பொதுச்செயலராக கடந்த 2015ம் ஆண்டு முதல் சீதாராம் யெச்சூரி, 72, செயல்பட்டு வருகிறார்.இந்நிலையில், நிமோனியா காய்ச்சல் காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த மாதம் 19-ம் தேதி, சீதாராம் யெச்சூரி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு திடீரென சுவாசக் குழாய் தொற்று ஏற்பட்டதால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சீதாராம் யெச்சூரிக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதுடன், அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூ., வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.