உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீங்கள் மன்னரும் இல்லை... இது மன்னராட்சியும் இல்லை; உத்தரகண்ட் முதல்வருக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு!

நீங்கள் மன்னரும் இல்லை... இது மன்னராட்சியும் இல்லை; உத்தரகண்ட் முதல்வருக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டில்லி: வனத்துறை அதிகாரி நியமன விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கில் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமிக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நியமனம்

வனத்தில் இருந்த மரங்களை சட்டவிரோதமாக வெட்டியதாக எழுந்த குற்றச்சாட்டில், கார்பெட் புலிகள் சரணாலய இயக்குநராக இருந்த ராகுல் என்பவர் இரு ஆண்டுகளுக்கு முன் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த சூழலில், அவரை ராஜாஜி புலிகள் சரணாலய இயக்குநராக நியமித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டிருந்தார்.

வழக்கு

அவரது இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், ராகுலின் நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மன்னராட்சி

இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்., கவாய், பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல்வரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், 'நீங்கள் நினைத்ததை எல்லாமல் செய்வதற்கு, நீங்கள் மன்னரும் இல்லை, இது மன்னராட்சியும் இல்லை. மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப செயல்பட வேண்டும்.

குட்டு

குற்றம்சாட்டப்பட்டுள்ள ராகுலுக்கு எதிரான துறை ரீதியான நடவடிக்கை கைவிடப்பட்டிருந்தால், அவரை வனஅதிகாரியாக நியமித்திருக்கலாம். வனத்துறை அமைச்சர், தலைமைச் செயலரின் முடிவில் இருந்து, மாறுபட்டிருந்தால், அதற்கான காரணத்தை முதல்வர் கூறியிருக்க வேண்டும். முதல்வராக இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றில்லை,' என்று ஆவேசமாக தெரிவித்தனர்.மேலும், வனஅதிகாரியாக ராகுல் நியமித்த அரசாணையை திரும்பப் பெறவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

பேசும் தமிழன்
செப் 06, 2024 08:41

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு தான் அதிகாரம் உள்ளது... நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்கள் இல்லை.... அதாவது தெரியுமா ???


பவித்ரா
செப் 05, 2024 22:58

ஆனா செங்கோல் உண்டு...


Ramesh Sargam
செப் 05, 2024 22:07

இன்று நம் நாட்டில் பல மாநிலங்களில் பல முதல்வர்கள் மன்னர்கள்போல் நடந்துகொள்கிறார்கள். அவர்களுக்கும் இந்த குட்டு ஒரு எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.


venugopal s
செப் 05, 2024 18:52

செய்தியில் உத்தராகண்ட் பாஜக அரசின் ஆட்சி என்று சொல்லி இருக்கலாமே!


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 05, 2024 18:36

உத்தரகாண்ட் முதல்வர் செஞ்சது தப்புதான் .... நோ டவுட் .... மேற்கு வங்க அம்மையார் சந்தீப் கோஷ் க்கு ஆசுபத்திரி மாத்தின மாதிரிதான் ன்னு நெத்தியடியா ... அடிமைகள் கேட்கலாம் ... ஆனா கூட்டணி தர்மம் தடுக்குது ....


M S RAGHUNATHAN
செப் 05, 2024 18:03

முதலில் இந்த நீதிபதிகள் தங்களை தாங்களே நியமிக்கும் முறை மாற வேண்டும். நீதிபதிகளை நீக்கும் முறைகளும் மாற்றப் படவேண்டும். எந்த ஒரு உயர்நீதி மன்ற அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதியும் அவர்கள் ஓய்விற்கு பின் எந்த பதவியிலும் நீதி மன்றங்களோ அல்லது அரசோ நியமிக்கக் கூடாது. ராஜ்ய சபாவிற்கு 10 வருடங்களுக்கு அரசு அல்லது கட்சி சார்பாக நியமனம் செய்யக் கூடாது. The judicial overreacting and activism is reaching obscene level.


Sivakumar
செப் 05, 2024 17:25

பிஜேபி கட்சியினர் குட்டு வாங்கும்போது மட்டும்தான் நீதிபதிகளுக்கு கட்டுப்பாடு பற்றி இங்கு பலர் விவாதிப்பார்கள் - எதிர்கட்சியினரின் EVM முறைகேடு போல. ஹஹஹா


Dharmavaan
செப் 05, 2024 17:21

இந்த நீதிகள் என்ன மன்னர்களோ எல்லோரையும் விமர்சிக்க


Sivak
செப் 05, 2024 15:39

"காஷ்மீர் கவர்னருக்கு மன்னர் என நினைப்பு: அனல் பறந்த ராகுல் பிரசாரம்" இப்படி ஒரு செய்தி வந்ததே நேற்று ... அதே சாயல்ல இருக்கு இந்த நீதிபதி கருத்து ....


abdulrahim
செப் 05, 2024 15:24

இந்நேரம் எதிர்க்கட்சியை சேர்ந்த முதல்வருக்கு கண்டனம் என்றால் இங்கே இருக்கும் பாஜக அடிப்பொடிகள் இந்த நீதிபதிகளை புகழ்ந்து தள்ளியிருக்கும் ஆனால் குட்டு வாங்கியது பாஜக முதல்வர் என்பதால் நீதிபதிகளை தாக்கி எழுதுகிறதுகள்....


R S BALA
செப் 05, 2024 16:14

நீங்கள் மட்டும் எப்படியாம்?


Sathyanarayanan Sathyasekaren
செப் 05, 2024 16:54

பொன்முடி, ராகுல் கான் போலி காந்தி போன்ற கொள்ளையர்களுக்கு விடுதலை கொடுத்த நீதிபதிகளை உங்களை போன்ற கத்திக்கு பயந்து மதம் மாறியவர்கள் புகழ்வது எதனால்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை