உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்னை கண்காணிக்கவே இசட் பிளஸ் பாதுகாப்பு

என்னை கண்காணிக்கவே இசட் பிளஸ் பாதுகாப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை : “மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், என்னைப் பற்றிய தகவல்களை துல்லியமாக அறியவே, 'இசட் பிளஸ்' பாதுகாப்பை மத்திய அரசு வழங்கி உள்ளது,” என, சரத்சந்திர பவார் தேசியவாத காங்.,பிரிவின் தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.மஹாராஷ்டிராவில், பிரதான எதிர்க்கட்சியான சரத்சந்திரபவார் தேசிவாத காங். கட்சியின் சரத் பவாரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கிடைத்த தகவலின்படி, அவருக்கு, இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பை வழங்கி, சமீபத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.இதன்படி, சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஆயுதமேந்திய 55 வீரர்கள், 24 மணி நேரமும், சுழற்சி முறையில் சரத் பவாருக்கு பாதுகாப்பு வழங்குவர்.இந்நிலையில், நவி மும்பையில், இசட் பிளஸ் பாதுகாப்பு குறித்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சரத் பவார் அளித்த பதில்:மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த நேரத்தில், நான் யாரை சந்திக்கிறேன்; எங்கு செல்கிறேன் என்பதை அறிய, இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கி உள்ளது. என்னைப் பற்றிய தகவல்களை அறிய அரசு மிகவும் ஆவலாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

R.Varadarajan
ஆக 25, 2024 19:50

வேண்டாம் என சொல்லும் திராணி இல்லையே


nv
ஆக 24, 2024 07:16

அரசு உடனடியாக இவருடைய பாதுக்காப்பை விலக்கி கொள்ள வேண்டும்


ravi chandran
ஆக 24, 2024 06:22

உடனே பாதுகாப்பு வேண்டாம் என்று சொல்லவேண்டியது தானே. மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசை


Kannan Sethu
ஆக 23, 2024 22:53

Not bold enough to reject Z+ security only nondii சாக்கு


Anbuselvan
ஆக 23, 2024 21:51

பழுத்த அரசியல்வாதி. உடனே கண்டு பிடிச்சுட்டார். அதே போல எனக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வேண்டாம்னு எழுதி கொடுத்து அதை நிராகரிக்கவும் இவருக்கு சட்டத்தில் வாய்ப்பு உள்ளது.


RSPM Family
ஆக 23, 2024 21:51

கொடுக்கப் பட்டு உள்ள ட்யூட்டியை செய்யும் சி. ஆர். பி. எப். வீரர்களை ஏன் கொச்சைப் படுத்த வேண்டும்?


Ramesh Sargam
ஆக 23, 2024 21:32

அப்ப இவருக்கு அந்த இசட் பிளஸ் பாதுகாப்பு பிடிக்கவில்லை. பாதுகாப்பை அகற்றிவிடுங்கள். ஆனா ஒன்னு, நாளைக்கு இவருக்கு ஏதாவது ஆச்சுன்னா மத்திய அரசையோ, மோடிஜியையோ குறை சொல்லக்கூடாது. சொல்லிப்புட்டேன்.


புதிய வீடியோ