உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆப்பரேஷன் கவச் 139 பேர் கைது

ஆப்பரேஷன் கவச் 139 பேர் கைது

புதுடில்லி:டில்லியில் நடத்தப்பட்ட, ஆப்பரேஷன் கவச் 8.0 படி, 139 போதைப்பொருள் விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.ஆப்பரேஷன் கவச் 8.0 என்ற பெயரில், தலைநகர் டில்லியில், கடந்த 18 ம் தேதி மாலை 6:00 துவங்கிய சோதனை, 19ம் தேதி மாலை 6:00 மணிக்கு நிறைவடைந்தது.டில்லி நகரம் முழுவதும் 1,040 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. டில்லி மாநிலத்தின் 15 மாவட்டங்களில் 350 குழுக்கள் சோதனையில் ஈடுபட்டன. இந்த சோதனையின் போது, 90 கிராம் ஹெராயின், 25 கிலோ கஞ்சா, 3.32 கிராம் கொகைன், 4.93 கிராம் எம்.டி.எம்.ஏ., போன்ற போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. போதைப்பொருள் விற்பனை தொடர்பாக, 139 பேர் கைது செய்யப்பட்டு, 133 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை