உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்க தேசத்தில் நிலைமை மோசம்; இந்தியாவுக்கு அகதியாக வந்த ஹிந்துக்கள் 10 பேர் சொல்வது இதுதான்!

வங்க தேசத்தில் நிலைமை மோசம்; இந்தியாவுக்கு அகதியாக வந்த ஹிந்துக்கள் 10 பேர் சொல்வது இதுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அகர்தலா: இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக, வங்கதேசத்தை சேர்ந்த ஹிந்துக்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர், 'வங்க தேசத்தில் ஹிந்துக்கள் தொடர்ந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறார்கள்' என்றார்.வங்கதேசத்தில் தொடர்ந்து ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்கள் மீதும், அவர்களது வழிபாட்டு தலங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. அங்கிருந்து ஹிந்துக்கள் அகதியாக வெளியேற தொடங்கியுள்ளனர். இவ்வாறு வந்த 10 பேர் திரிபுராவில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.அம்பாசா ரயில் நிலையத்தில் இருந்து அசாமில் உள்ள சில்சார் செல்லும் ரயிலில் ஏற முயன்ற, இரண்டு பெண்கள், மூன்று இளைஞர்கள் மற்றும் ஒரு முதியவர் உட்பட வங்கதேசத்தை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவருமே ஹிந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான, சங்கர் சந்திர சர்க்கார் கூறியதாவது: எந்த சூழ்நிலையிலும் நாங்கள் வங்கதேசத்திற்கு திரும்ப மாட்டோம். வங்கதேசத்தில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஹிந்துக்களின் உயிர்கள் மற்றும் உடைமைகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடக்கிறது. இந்தியாவுக்குத் தப்பி வருவதற்கு முன்பு எங்களுடைய சில சொத்துக்களை விற்று விட்டோம். ஆனால் வீட்டுப் பொருட்கள், இன்னும் உள்ள சொத்துக்கள் ஆகியவற்றை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டோம். ஆயிரக்கணக்கான ஹிந்து குடும்பங்கள் இந்தியாவிற்கு வர விரும்புகின்றனர்.பல்வேறு காரணங்களால் அவ்வாறு செய்ய முடியவில்லை. அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசின் ஆட்சியின் போது, ​​நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம், எங்கள் பகுதிகளில் ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே பகை இல்லை. ஆனால் முஹம்மது யூனுஸ் தலைமையிலான காபந்து அரசாங்கம் பதவியேற்ற பிறகு, நாங்கள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Ramesh Sargam
டிச 08, 2024 21:37

வங்கதேச ஹிந்துக்களை காக்கவேண்டியது இந்திய அரசின் தலையாய கடமை.


kulandai kannan
டிச 08, 2024 20:43

அங்குள்ள 1.30 கோடி இந்துக்களை இந்தியாவிற்கு வரவழைத்து, மேற்கு வங்கத்திலுள்ள 1.30 கோடி மர்ம நபர்களை வங்கத்திற்கு அனுப்பி வைக்க ஒப்பந்தம் போட்டு விடலாம்.


J.V. Iyer
டிச 08, 2024 18:12

ஹிந்துக்கள் மைனாரிட்டியாக உள்ள நாடுகளில் அவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். ஆனால் ஹிந்துஸ்தானில் நிலைமை வேறு. மெஜாரிட்டியாக உள்ள ஹிந்துக்கள் இந்தியாவில் இங்கு துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு யாரும் துணை வருவதில்லை.


நிக்கோல்தாம்சன்
டிச 08, 2024 17:59

ஆனால் பெங்களூரில் வங்கதேச முஸ்லிம்கள் மேற்கு வங்க முஸ்லிம்களை போல வந்திறங்குவதை யார் தடுப்பார்கள் ?


Sundar R
டிச 08, 2024 16:39

சிஏஏ-வை எதிர்த்த கட்சியினர் தான் நம் பாரதத்திற்குள் வரும் பங்களாதேஷ் மைனாரிட்டி மக்கள் குறிப்பாக ஹிந்துக்களுக்கு பதிலளிக்க வேண்டும்.


Gopalakrishnan Thiagarajan
டிச 08, 2024 13:09

ஊடுருவல் நச்சு பாம்புகள் திருப்பி அனுப்பப் படவேண்டும்.காலத்தின் கட்டாயம்


RAMAKRISHNAN NATESAN
டிச 08, 2024 12:02

2014 இல் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பேசியது : ஊடுருவல்காரர்கள் மூட்டை முடிச்சுக்களுடன் தயாராக இருங்கள் .... நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீங்கள் வெளியேற வேண்டியிருக்கும் ...... அப்படி நடந்ததா ????


Suppan
டிச 08, 2024 17:25

சி ஏ ஏ கொண்டு வந்ததே அதற்குத்தான். அதை எதிர்த்து கயவர்கள் வம்படியாக போராட்டம் நடத்தினர். போதாக்குறைக்கு மமதா வங்க தேச முஸ்லிம்களை ஒட்டு வங்கியாக மாற்றி அவர்களை பாதுகாக்கிறார். நாடு முழுவதும் ஊடுருவி உள்ள வங்கதேசத்தவர்களை ஒட்டு வங்கி கையை விட்டுப்போய்விடக்கூடாது என்று இந்தி கூட்டணி பாதுகாக்கிறது


RAMAKRISHNAN NATESAN
டிச 08, 2024 19:44

அதற்கல்ல ...... அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானில் இருந்து 31 டிசம்பர் 2014 அல்லது அதற்கு முன் இந்தியா வந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜைனர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை பெறுவதற்கான தடைகளை CAA நீக்குகிறது ....


RAMAKRISHNAN NATESAN
டிச 08, 2024 11:56

மத மக்கள் தொகையில் மாற்றத்தின் தாக்கங்கள்: முஸ்லீம் மக்கள்தொகை அதிகரிப்புடன் மத மக்கள்தொகையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு உட்பட்ட நாடுகள் கடுமையான இரத்தக்களரி மோதல்களைக் கண்டுள்ளன. முஸ்லிம்களில் குறிப்பிடத்தக்க பிரிவுகள் ஷரியாவை அமல்படுத்த வேண்டும் என்றும் அந்தந்த நாடுகளின் அரசியலமைப்புகளைப் பின்பற்றுவதில்லை என்றும் வலியுறுத்துகின்றனர். ஐரோப்பாவில் நடந்த மதக் கலவரங்கள், பிரிட்டனின் தெருக்களில் முஸ்லீம் தீவிரவாதிகளின் தெருச் சண்டைகள், ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கின் பல நாடுகளில் இஸ்லாமிய போராளிகள் ஆதிக்கம் செலுத்தும் உள்நாட்டுப் போர் ஆகியவை உலகளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மைகள்.


Rajarajan
டிச 08, 2024 11:30

இந்த அழகில், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவுடன் சேர்ந்தால், அங்கிருந்து வரும் குறிப்பிட்ட பிரிவினர் இந்தியா முழுதும் ஆக்கிரமித்தால்? பின்விளைவுகளை நினைத்து பார்க்கவே பயமாக உள்ளது. அவர்கள் அங்கேயே இருக்கட்டும். பொது சிவில் சட்டம் மற்றும் குழந்தை பிறப்பு விதிகள் பொதுவாக வைத்தால் கூட, பின்னாளில் நிலைமை பயங்கரம் ஆகும்.


G Mahalingam
டிச 08, 2024 10:46

பாஜாகவை தவிர அனைத்து கட்சிகளும் இஸ்லாமிய வோட்டுக்காக ஈவேரா சொன்ன 21 பக்கம்தான். இந்துக்கள் கொடுமை படுத்த படுகிறார்கள் என்று பாஜாகவை தவிர ஒரு கட்சியும் கண்டனம் தெரிவாக்க வில்லை. அப்படி தெரிவித்தால் இஸ்லாமிய நோட்டுகள் போய் விடும். ஆனால் பல இஸ்லாமிய இயக்கங்கள் கண்டனங்கள் தெரிவிக்கின்றன.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை