உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டவிரோதமாக தங்கியிருந்த 10 வெளிநாட்டவர் நாடு கடத்தல்

சட்டவிரோதமாக தங்கியிருந்த 10 வெளிநாட்டவர் நாடு கடத்தல்

புதுடில்லி: சட்டவிரோதமாக தங்கியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10 பேர் நாடு கடத்தப்பட்டனர்.தேசிய தலைநகர் பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு துணைநிலை கவர்னர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.அந்த வகையில், உரிய ஆவணங்கள் இன்றியும் சட்டவிரோதமாகவும் குடியேறி ஏராளமான வெளிநாட்டினர் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து அதிரடி சோதனை நடத்தி எட்டு நைஜீரியர்கள், கானா, ஐவரி கோஸ்ட்டைச் சேர்ந்தவர்கள் என 10 பேர் பிப்ரவரியில் கைது செய்யப்பட்டனர்.அவர்களை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு நாடு கடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகம், இந்த 10 பேரையும் நாடு கடத்தும்படி உத்தரவிட்டது.அவர்கள், அவரவர் நாடுகளுக்கு முறைப்படி அனுப்பிவைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை