உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 10 மாத குழந்தைக்கு எச்.எம்.பி.வி., தொற்று

10 மாத குழந்தைக்கு எச்.எம்.பி.வி., தொற்று

திப்ருகர்: சீனாவில் எச்.எம்.பி.வி., எனப்படும் ஹியூமன் மெட்டா நிமோ வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து நம் நாட்டிலும் இந்த வைரஸ் பரவத் துவங்கியது. கர்நாடகா, தமிழகம், குஜராத் மாநிலங்களில் சிலருக்கு இந்த தொற்று பரவியது உறுதி செய்யப்பட்டது.இந்நிலையில், அசாம் மாநிலத்தில் 10 மாத குழந்தைக்கு எச்.எம்.பி.வி., தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நான்கு நாட்களுக்கு முன் இந்த குழந்தைக்கு நடத்தப்பட்ட சோதனையில், எச்.எம்.பி.வி., தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், பயப்பட தேவையில்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, நம் நாட்டில் இந்த தொற்று பாதித்தோர் எண்ணிக்கை, 11 ஆக உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை