உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹாராஷ்டிராவில் கனமழையால் 10 பேர் உயிரிழப்பு: ரெட் அலெர்ட் விடுத்தது வானிலை மையம்

மஹாராஷ்டிராவில் கனமழையால் 10 பேர் உயிரிழப்பு: ரெட் அலெர்ட் விடுத்தது வானிலை மையம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக, 10 பேர் உயிரிழந்தனர். ம்பை, தானே, நாசிக் உள்ளிட்ட இடங்களுக்கு வானிலை மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.மஹாராஷ்டிராவில் மும்பை, தானே உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. மும்பையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கொலாபாவில் 12 செ.மீ., மழையும், சாண்டா க்ரூசில் 9 செ.மீ., மழையும் பதிவானது. சில இடங்களில், 5 மணி நேரத்தில், 5 செ.மீ., மழை பெய்தது. இதனால், நகரின் முக்கிய சாலைகள் வெள்ளக்காடாகின. உடனடியாக மும்பை மாநகராட்சி ஊழியர்கள் தேங்கிய நீரை அகற்றினர்.ஹிண்ட்மாதா, காந்தி மார்க்கெட், சுனாபட்டி, மலாட், தஹிசர் மற்றும் மன்குர்ட் சுரங்கப்பாதைகளில் தேங்கிய தண்ணீரும் பம்பு செட்கள் வைத்து அகற்றப்பட்டன.மும்பை, தானே, பால்கர், ராய்காட் உள்ளிட்ட இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.மாநிலம் முழுவது பெய்த கனமழை காரணமாக 10 பேர் உயிரிழந்தனர். மழையால் பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்து 11,800க்கு மேற்பட்டோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ஆற்றின் கரையோர உள்ள கோவில்கள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக மீட்பு பணி மேற்கொள்ள வேண்டும் என மஹா முதல்வர் பட்னவிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Iyer
செப் 29, 2025 11:10

நகரங்களில் - சாலைகளும் + கட்டிடங்களும் கட்டி - மழை பூமிக்குள் செல்ல முடியாமல் செய்துவிட்டனர். மீதி உள்ள சிறிது விவசாய நிலங்களில் ரசாயன விவசாயத்தால் - விளை நிலம் பாறைபோல் இறுகி - நீர் உறிஞ்சும் தன்மையை இழந்து விடுகின்றது ரசாயன விவசாயத்தை ஒழிக்கும் வரை வெள்ள பிரச்னை தீராது. எல்லா மாநிலங்களிலும் - சிக்கிம் போல - இயற்கை விவசாயம் செய்யவேண்டும்


Ramesh Sargam
செப் 29, 2025 09:34

மும்பை மக்களே மிக ஜாக்கிரதையாக இருக்கவும். ஆட்சியில் உள்ளவர்கள் அவரவர்கள் வீட்டில் பத்திரமாக இருந்துகொண்டே வெறும் எச்சரிக்கை மட்டும் விடுவார்கள். களத்தில் இறங்கி மீட்புப்பணி செய்யமாட்டார்கள்.


Field Marshal
செப் 29, 2025 09:55

நீங்க மும்பைக்கு சென்று உதவலாமே ..


Ramesh Sargam
செப் 29, 2025 10:06

அப்ப என்ன முதல்வராக்கு.


முக்கிய வீடியோ