உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்

தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

- நரேந்திர மோடி, பிரதமர் நுாறு ஆண்டுகளுக்கு முன், விஜயதசமி புனித நாளில், ராஷ்ட்ரீய சுயம்சேவக் சங்கம் நிறுவப்பட்டது. இது, இந்தியாவின் தேசிய உணர்வு அவ்வப்போது ​​வெவ்வேறு வடிவங்களில், காலத்தின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் தொன்மையான மரபின் புதிய வெளிப்பாடாகும்.நம் காலத்தில், இந்த சங்கம் காலத்தைக் கடந்த தேசிய உணர்வின் உருவகமாகும். ஆர்.எஸ்.எஸ்., சங்கத்தின் நுாற்றாண்டு விழாவை நாம் காண்பது நம் தலைமுறை சுயம்சேவகர்களின் அதிர்ஷ்டமாகும்.இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில், தேசத்திற்கும், மக்களுக்கும் சேவை செய்வதாக உறுதிமொழி எடுத்துக் கொள்வதில் அர்ப்பணிப்புணர்வுடன் இருக்கும் எண்ணற்ற ஸ்வயம்சேவகர்களுக்கு, என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சங்கத்தின் நிறுவனர், நம் வழிகாட்டிம் பரம பூஜ்ய டாக்டர் ஹெட்கேவருக்கு மரியாதை செலுத்தி வணங்குகிறேன்.நுாறு ஆண்டுகளின் இந்த புகழ்பெற்ற பயணத்தைக் குறிக்கும் வகையில், மத்திய அரசு ஒரு சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தை வெளியிட்டுள்ளது.

ஒரே மனப்பான்மை

பெரும் நதிகளின் கரையில் மனித நாகரிகங்கள் செழித்து வளர்ந்தன. இதேபோல், சங்கத்தின் தாக்கத்தால் எண்ணற்ற உயிர்கள் வளம் பெற்றுஉள்ளன. ஒரு நதி அதன் நீரால் தொடும் நிலத்தின் ஒவ்வொரு பகுதியையும் வளப்படுத்வதைப் போல், சங்கம் நம் நாட்டின் ஒவ்வொரு பகுதியையும், சமூகத்தின் ஒவ்வொரு துறையையும் வளர்த்து உள்ளது. ஒரு நதி பெரும்பாலும் பல நீரோடைகளாகப் பெருகி அதன் தாக்கத்தை விரிவுபடுத்துகிறது. சங்கத்தின் பயணத்திலும் இதேபோன்ற தாக்கம் ஏற்பட்டுள்ளது.அதன் பல்வேறு அமைப்புகள் மூலம், கல்வி, விவசாயம், சமூக நலன், பழங்குடியினர் நலன், பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கமாகவும் செயல்படுகிறது. அவர்கள் பணியாற்றும் துறைகள் வேறுபட்டிருந்தாலும், அவை அனைத்தும் 'தேசமே முதன்மையானது' என்ற ஒரே மனப்பான்மையையும், தீர்மானத்தையும்கொண்டுள்ளதாக இருந்து வருகிறது.நாட்டை சிறப்பாகக் கட்டமைப்பதில் ஆர்.எஸ்.எஸ்., தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.தலைசிறந்த ஆளுமை திறன் மூலம் நாட்டைக் கட்டமைத்தல் என்ற தலைமைத்துவப் பண்பை வளர்த்துக் கொள்வதே இந்த சங்கத்தின் பாதையாக இருந்து வருகிறது. இதற்காக, அந்த அமைப்பின் அன்றாட நடவடிக்கைகளைத் தனித்துவமான, எளிமையான மற்றும் நீடித்த நெறிமுறைகளை உருவாக்கியது.

முதன்மை பணி

ஷாகா என்பது ஒவ்வொரு ஸ்வயம்சேவகரும் 'நான் என்பதிலிருந்து நாம்' என்ற பயணத்தைத் தொடங்கி, தனிப்பட்ட மாற்றத்தின் செயல்முறையின் மூலம் வழிநடத்தி செல்லும் உத்வேகமான முறையாகும். இந்த சங்கம் நிறுவப்பட்ட தருணத்திலிருந்தே, நாட்டின் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளை முதன்மைப் பணியாக கருதியுள்ளது. பரம பூஜ்ய டாக்டர் ஹெட்கேவர் மற்றும் பல்வேறு ஸ்வயம்சேவகர்களும் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றனர்.டாக்டர் ஹெட்கேவர் பல முறை சிறையில் அடைக்கப்பட்டார். சங்கம் பல சுதந்திரப் போராளிகளுக்கு ஆதரவையும், பாதுகாப்பையும் வழங்கியது. சுதந்திரத்திற்குப் பின், சங்கம் தொடர்ந்து தேசத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றி வருகிறது. பல தசாப்தங்களாக, பழங்குடியின சமூகங்களின் பாரம்பரியம், பழக்கவழக்கம் மற்றும் மதிப்புகளைப் பாதுகாப்பதற்கும் வளர்ப்பதற்கும் ஆர்.எஸ்.எஸ்., தன்னை அர்ப்பணித்துக் கொண்டு உள்ளது.இன்று, சேவா பாரதி, வித்யா பாரதி, ஏகல் வித்யாலயா மற்றும் வனவாசி கல்யாண் ஆசிரமம் போன்ற நிறுவனங்கள் பழங்குடியின சமூகங்களுக்கு அதிகாரமளிப்பதற்கான வலுவான அமைப்புகளாக உருவெடுத்துள்ளன.

பெரும் சவால்கள்

பல நுாற்றாண்டுகளாக, சாதி பாகுபாடு, தீண்டாமை போன்ற சமூகக் கேடுகள் ஹிந்து சமூகத்திற்கு பெரும் சவால்களாக இருந்து வருகின்றன. டாக்டர் ஹெட்கேவர் காலத்திலிருந்து இன்று வரை, சங்கத்தின் ஒவ்வொரு உறுப்பினரும், ஒவ்வொரு சர்சங்கசாலக்கும், அத்தகைய பாகுபாட்டிற்கு எதிராகப்போராடியுள்ளனர்.தற்போது, சர்சங்கசாலக், மரியாதைக்குரிய மோகன் பகவத், ஒற்றுமைக்கான தெளிவான அழைப்பை விடுத்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

jayakumar
அக் 03, 2025 22:00

maha avathar modiji


Sundar
அக் 03, 2025 20:57

RSS = Relentless Social Service


spr
அக் 03, 2025 20:16

ஆர் எஸ் எஸ் குறித்து வெறெந்தக் கருத்து சொல்லப்பட்டாலும், அந்த அமைப்பு இளைஞர்களிடையே ஒழுக்கம், கட்டுப்பாடு, இறை நம்பிக்கை, இந்து மத உணர்வு, தேசபக்தி இந்தியாவின் பெருமை குறித்த விழிப்புணர்வையும் பயிற்சியையும் மேற்கொண்டது என்பது நேர்மையானவர்களால் மறுக்கப்பட இயலாத ஒன்றே.


ஆரூர் ரங்
அக் 03, 2025 19:59

காந்தி நாட்டுக்காக உழைத்தவர் என்றால் ஒவ்வொரு புயல் வெள்ளம், பேரழிவு, கோவிட் 19 காலத்திலும் மக்கள் சேவையில் முன்னின்று பணியாற்றிய ஆர்எஸ்எஸ் சேவக்கர்களும் அவருக்கு இணையானவர்களே. போற்றுதலுக்க்குரியவர்கள். ஜெய் ஹிந்த்.


பிரேம்ஜி
அக் 03, 2025 18:41

பேசிக்கொண்டே இருக்கவேண்டியது தான்! மேடை கிடைத்தால் போதும்.


RAMESH KUMAR R V
அக் 03, 2025 18:09

உலகின் குருவாய் பாரதம் ஆகிட உன்னத சக்தி வளர்ப்போம் நாம் entra தாரக மந்திரத்தின் உன்னத அமைப்பு RSS. வளர்க.


Mahendran Puru
அக் 03, 2025 17:36

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. இந்த திடீர் கொண்டாட்டத்தின் மூலம் காந்தி ஜெயந்தியை திரை போட்டு மறைக்க முடியாது. அக்டோபர் 2 தேசப் பிதா பிறந்த நாள் தான். அவரை சுட்டுக் கொன்ற கோஷ்டி எத்தனைதான் பொய் சொன்னாலும் மக்கள் நம்ப மாட்டார்கள். பிரதமருக்கு வாழ்த்துகள்.


ஆரூர் ரங்
அக் 03, 2025 19:53

யார்? பாகி தேசப்பிதாவா?. அப்போ ராஜிவ் காந்தி படுகொலையில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு விருந்தளித்த நபர் நல்லவரா?


Shankar
அக் 03, 2025 17:29

துருக்கி, மங்கோலிய, அரேபிய நாய்கள் நம் நடை ஆக்கிரமித்து அழித்து சிதைத்து அடக்கியாளவில்லை என்றால், நம் நாட்டவருக்கு இசுலாமியம் பற்றிய உணர்வும் உயிர்பயதால் மதம் மாறியதும், மூலை சலவையால் மதமாறியதும் நிகழ்ந்திருக்காது. பாகிஸ்தானிகள் நமது ஒரே இனம், ஒரே இரத்தமாக வாழ்ந்ததை வெறுத்து, மறந்து, பகைத்து இன்று நம்மை காபிர் என சொன்னதற்கு அந்த தேசத்தை அழித்து சிதைப்பதே நமது தேசத்தின் தலையான கடமையாக இருக்கவேண்டும். ஜெய் ஹிந்து பாரத மாதாவுக்கு எப்போதும் ஜெயம்


மனிதன்
அக் 03, 2025 15:45

தேசபிதாவை கொன்றது, மக்களை மதத்தால், ஜாதியால் பிளவுவு படுத்தியது, ஆயிரக்கணக்கானவர்களை கொன்றொடுக்கியது, வெள்ளைக்காரனுக்கு சாமரம் வீசியது, மன்னிப்பு கடிதம் கொடுத்தது இதைத்தவிர RSS இந்த தேசத்திற்காக கிள்ளி எறிந்த ஒரு துரும்பை சொல்லுங்கள்...


SUBBU,MADURAI
அக் 03, 2025 21:42

Gandhi did not want Indians to use violence against the British but wanted Indians to use violence to defend the British from Germans. Make this make sense!


Bharathanban Vs
அக் 03, 2025 14:40

மதரீதியாக பாரதம் பிளவுப்படும் சூழ்நிலை உருவான போது அதை தடுக்கவும் தேசத்தில் பெரும்பான்மை மக்களிடையே ஒற்றுமை ஏற்படுத்தவும் சுயநலமின்றி உழைக்கும் தொண்டர்களை உருவாக்கும் பணிக்காக துவங்கப்பட்டது தான் ஆர்எஸ்எஸ். தேசவிரோத சக்திகள் ஆர்எஸ்எஸ் அமைப்பை நோக்கி பல தாக்குதல்களை நடத்தினாலும் அதையும் மீறி அந்த அமைப்பு வளர்ந்ததற்கு காரணம் அது ஏற்றுள்ள தர்ம பாதை தான்.... உலகிற்கே அமைதியான வாழ்க்கையை வழங்கும் சக்தியுடையது இந்து தர்மம் தான்... அதைக்கட்டிக்காக்கும் ஆர்எஸ்எஸ் உலகிற்கே நன்மையை அளிக்கும் இயக்கம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை