சிறை ஊழியர்கள் 11 பேர் சஸ்பெண்ட்
சண்டிகர்:பஞ்சாபில், கடமையை செய்யத் தவறிய சிறை ஊழியர்கள், 26 பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.பஞ்சாப் சிறைத்துறை அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர் கூறியதாவது:அரசுப் பணியில் கடமையை செய்யத் தவறிய மான்சா மாவட்ட சிறைக் கண்காணிப்பாளர் இக்பால் சிங் பிரார், லூதியானா மத்தியச் சிறை துணைக் கண்காணிப்பாளர்கள் மணீந்தர் பால் சீமா, சந்தீப் பிரார், லுாதியானா போர்ஸ்டல் சிறை துணைக் கண்காணிப்பாளர் அனில் பண்டாரி உட்பட மாநிலம் முழுதும், 11 சிறை ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.சிவில் சர்வீசஸ் விதிமுறைகள் - 1970ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு நல்ல நிர்வாகத்தை வழங்க உறுதிபூண்டுள்ளது. அரசு அதிகாரி அல்லது ஊழியர் கடமையில் அலட்சியம் காட்டினால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.