உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் 119 பயங்கரவாதிகள் ஊடுருவல்: எச்சரிக்கிறது உளவுத்துறை

காஷ்மீரில் 119 பயங்கரவாதிகள் ஊடுருவல்: எச்சரிக்கிறது உளவுத்துறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் 119 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளனர். அவர்களில் 79 பேர் பிர் பஞ்சால் மலைத்தொடருக்கு வடக்கே பதுங்கி உள்ளனர் என உளவுத்துறை எச்சரித்துள்ளது.ஜம்மு காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாத செயல்கள் அடுத்தடுத்து நடக்கின்றன. இதனால் போலீஸ் மற்றும் ராணுவ உளவுப்படையினர் கண்காணிப்பை உஷார்படுத்தியுள்ளனர்.பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்து உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:ஜம்மு காஷ்மீரில் 119 பயங்கரவாதிகள் தற்போது செயல்பட்டு வருகின்றனர். இவர்களில் 79 பேர் பிர் பஞ்சால் எல்லைக்கு வடக்கே பதுங்கி உள்ளனர். 18 பேர் உள்ளூர் ஆட்கள் என்றும், 61 பாகிஸ்தானியர்கள் எனவும் தெரியவந்துள்ளது. பிர் பஞ்சாலுக்கு தெற்கில், 40 பயங்கரவாதிகள் உள்ளனர்.அவர்களில் 34 பேர் வெளிநாட்டினர்; 6 பேர் மட்டுமே உள்ளூர்காரர்கள் ஆவர். ஜம்மு -காஷ்மீரில் இந்த ஆண்டில் இதுவரை 25 பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்கள் நடந்திருக்கிறது. இந்த சம்பவங்கள், 2024ல் 24 வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் வீர மரணத்திற்கு வழிவகுத்தன, கடந்த 2023ல் 25 சம்பவங்களில் இதேபோன்ற தாக்குதல்களால் 27 பாதுகாப்புப் படையினரின் வீர மரணங்கள் நிகழ்ந்தன. இந்த ஆண்டில்(2024) 61 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் வீழ்த்தியுள்ளனர். இவர்களில் 45 பேர் ஜம்மு காஷ்மீரிலும், 16 பேர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகேயும் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் 21 பேர் பாகிஸ்தானியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில்(2023) 60 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் 35 பேர் உள்நாட்டினர் மற்றும் 12 பேர் பாகிஸ்தானியர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான உள்ளூர் ஆதரவு குறைந்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்கு உள்ளூர் ஆட்சேர்ப்பு குறைந்துள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தான் அதன் எல்லைகளுக்குள் இருந்து வேலையில்லாத, இளைஞர்களை சேர்ப்பது தொடர்ந்து நடக்கிறது.இவ்வாறு உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
நவ 12, 2024 21:20

யாருங்க அங்கே அமரன் படத்திற்காக காஷ்மீர் மக்களின் வாழ்க்கையை குறிப்பிட்டது ? உங்க சொந்தகாரங்க பாக்கில் இருந்து என்னவெல்லாம் செய்யுறாங்க பாருங்க அப்பு