உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜெய்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து; 17 வாகனங்கள் மீது மோதிய சரக்கு லாரி, 12 பேர் பலி

ஜெய்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து; 17 வாகனங்கள் மீது மோதிய சரக்கு லாரி, 12 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்பூர்: ஜெய்பூர் அருகே சரக்கு லாரி அடுத்தடுத்து 17 வாகனங்கள் மீது மோதியதில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.இதுபற்றிய விவரம் வருமாறு;ஹர்மதா போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட லோஹா மண்டி என்ற பகுதியில் இந்த கோர விபத்து நிகழ்ந்தது. பிற்பகல் 1 மணியளவில் சாலை எண் 14ல் இருந்து சரக்கு லாரி ஒன்று நெடுஞ்சாலையில் நுழைய முயன்றது.அப்போது எதிர்பாராத விதமாக, அந்த சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதியது. விபத்தால் அங்கு போக்குவரத்தில் திடீர் சீர்குலைவு ஏற்பட, மொத்தம் 17 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. விபத்தில் மொத்தம் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று தெரிகிறது. இதுகுறித்து ஜெய்பூர் கலெக்டர் ஜிதேந்திர சோனி கூறுகையில், லோஹா மண்டி அருகே சரக்கு லாரி மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 12 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர் என்றார்.கோர விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்தன. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார். போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
நவ 04, 2025 08:24

நெடுஞ்சாலைக்குள் நுழையும் வாகனங்களுக்கு நீண்ட merging road போடணும். பின்னால் வரும் வாகனங்கள் வேகத்தைக்.குறைத்துக் கொண்டு வழிவிடணும். இதெல்லாம் அமெரிக்காவில் 13 வயதிலிருந்தே சொல்லிக்.குடுக்கறாங்க. இங்கே கண்டவன் காண்டிராக்ட் எடுத்து ரோடு போட்டு எட்டுவழிச்சாலை, கதிசக்தி, புண்ணாக்குன்னு சொல்லிக்கிட்டு திரியறாங்க. இதிலே உலகத்தரம் வாய்ந்த சாலைகள்னு பெருமிதம்.


சிட்டுக்குருவி
நவ 03, 2025 20:15

எல்லா அரசுகளும் இப்போது சாராயம் விற்பதில் ஆர்வம் காட்டுகின்றன .ஆனால் சாராயத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எந்த கவனமும் செய்வதில்லை .ஒவ்வொரு மாநிலமும் அந்தந்த மாநிலத்தின் எல்லைக்குள்ள நெடுஞ்சாலைகளில் குடிபோதையில் வாகனம் இயக்குவதை தடுக்கும் வகையில் நெடுஞ்சாலை காவல்படையை ஏற்படுத்தி குடிபோதையில் வாகனம் இயக்குவதை தடைசெய்யவேண்டும் .சாலையில் ப்பாதுகாப்பில்லை ,ரயிலில் ப்பாதுகாப்பில்லை ,குடியிருப்புகளில் பாதுகாப்பில்லை ?சாராயம் விற்கும் அரசுகள் பொது இடங்களில் குடித்து இடைஞ்சல் செய்வதை தடுக்க நடவடிக்கையெடுக்கவேண்டும் .


முதல் தமிழன்
நவ 03, 2025 19:37

சிபிஐ விசாரணை வேண்டும்


அப்பாவி
நவ 03, 2025 18:24

காலைல ஒரு விபத்து. மத்தியானம் இன்னொரு விபத்து. டபுள் இஞ்சின் வெச்சு ஓட்டுறாங்க..


ஜெய்ஹிந்த்புரம்
நவ 03, 2025 19:52

அடப்பாவி.


சமீபத்திய செய்தி