உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜஸ்தானில் பஸ், டெம்போ மோதிய விபத்து; 8 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தானில் பஸ், டெம்போ மோதிய விபத்து; 8 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் பஸ்சும், டெம்போவும் மோதிக் கொண்டதில் 8 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.குவாலியரில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கிச் ஸ்லீப்பர் கோச் பஸ் ஒன்று வேகமாக சென்று கொண்டு இருந்தது. சுமிபூர் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், டெம்போ மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இர்பான் என்கிற பூந்தி (38), அவரது மனைவி ஜூலி (34) மற்றும் 8 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பஸ் டிரைவர் அதிக வேகமாக வந்ததே விபத்துக்கு காரணம் என்று போலீஸ் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
அக் 20, 2024 17:31

இரங்கல்னு சொல்லுட்டு நாலு பெரியவங்க வருவாங்களே... வெளிநாடு போயிட்டாங்களா?


Ramesh Sargam
அக் 20, 2024 12:19

இந்தியாவில் எங்கு பார்த்தாலும் விபத்துக்கள். ரயில் விபத்து, சாலை விபத்து, மற்றும் பல விதமான விபத்துக்கள். மக்களின் அஜாக்கிறதையே முக்கிய காரணம். மக்கள் இன்று fast food தின்று தின்று நிதானத்தை இழக்கின்றனர். விபத்தை ஏற்படுத்துகின்றனர், விபத்தில் சிக்கி மாள்கின்றனர். பொறுமை மிக மிக தேவை. Fast Food புறக்கணிக்கப்படவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை