உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பணம் முக்கியமா; பாஸ்வேர்டு எளிதாக இருப்பது முக்கியமா?

பணம் முக்கியமா; பாஸ்வேர்டு எளிதாக இருப்பது முக்கியமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மொபைல் போன் திருடும் கும்பல், அதனுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் திருடுவது தொடர்ந்து நடக்கிறது. இதற்கு எளிதான பாஸ்வேர்டு வைத்திருப்பதே காரணம் என்கின்றனர் போலீசார்.பாஸ்வேர்டு என்பது மிகவும் பலமாக இருக்க வேண்டும்; சிறிய மற்றும் பெரிய எழுத்துக்கள், எண்கள், சிறப்பு கேரக்டர்கள் கொண்டதாக பாஸ்வேர்டு இருக்க வேண்டும் என்று வங்கிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன. ஆனாலும் நம்மில் பலர், எளிதாக நினைவில் வைத்துக் கொள்வதற்காக, தங்களது பெயர், குடும்பத்தினர் பெயர், பிறந்த தேதி போன்றவற்றை பாஸ்வேர்டு ஆக பயன்படுத்துகின்றனர்.இன்னும் பலர், 123456 என்று பாஸ்வேர்டு வைத்திருக்கின்றனர். abcdef என்று வைப்போரும் உண்டு. இத்தகைய பலவீனமான பாஸ்வேர்டுகள், திருட்டு கும்பல்களுக்கு பேருதவி செய்கின்றன. சமீபத்தில் டில்லியில் திருடப்பட்ட மொபைல் போன்களில் இருந்து, பணத்தை திருடும் இரண்டு கும்பல்களை போலீசார் கைது செய்தனர்.ஜார்க்கண்டைச் சேர்ந்த சிறுவர்களுக்கு மொபைல் போன் திருடி வர இந்த கும்பல் பயிற்சி அளித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஓராண்டில் மட்டும் இப்படி 12,000 மொபைல் போன்களை திருடி, விற்பனை செய்துள்ளனர். இந்த மொபைல் போன்களில் இருக்கும் சிம் கார்டுகளுக்கு டூப்ளிகேட் சிம் கார்டு வாங்கி, வங்கி கணக்கை திறந்து பணத்தை எடுத்து விடுகின்றனர்.இத்தகைய திருடர்கள், வங்கி கணக்கின் யு.பி.ஐ., பாஸ்வேர்டு எளிதானதாக இருந்தால், யூகத்தில் கண்டுபிடித்து விடுகின்றனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.எனவே, யு.பி.ஐ., பாஸ்வேர்டு என்பது பலமாக இல்லாவிட்டால் பணம் பறி போய்விடும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கின்றனர் போலீசார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 22, 2025 15:13

பல பிரவுசர் பேஜஸ் லாஜின்கள், பல மொபைல் ஆப் லாகின்கள் ....... அத்தனையும் நினைவில் வைக்க வேண்டும் ..... டைரிகளில் எழுதினாலும் ரிஸ்க் .... பொசுக்குன்னு மண்டைய போட்டுட்டா வாரிசுகள் பாடு திண்டாட்டம் ....


KRISHNAN R
பிப் 22, 2025 09:34

அது சரி... ஒண்ணும் வேண்டாம் நேரடியாக சென்று வங்கி பரிவர்தனை காக சென்றால்.... எதே அந்நிய நாட்டு விரோதி போல பணியாளர் பாக்கிறார் .


V வைகுண்டேஸ்வரன்
பிப் 22, 2025 14:01

ஆமாம். சரியாகச் சொன்னீர்கள். ஆனால் நான் வாங்கிகளுக்கு நேரில் சென்று பரிவர்த்தனை செய்வதை நிறுத்தவில்லை. கிரைய, கிரெடிட் கார்டுகளை நான் உபயோகிப்பதில்லை டெபிட் கார்டு மட்டும், அரசு கட்டணங்களுக்காக. பணம் கொடுத்து வாங்கினால் ரெண்டு நன்மை. 1. பணம் கொடுத்து வாங்கும் போது, பில் வேண்டாம் என்றும் சொன்னால், பல கடைகளில் 7-10% விலை குறைத்து தருகிறார்கள். போன வாரம் ஒரு பாத்ரூம் Tap வாங்கப் போனேன். விலை ரூ. 525 என்றார்கள். கொஞ்சம் குறைப்பீர்களா என்றதும், கேஷா gpay யா கார்டா என்றார்கள். கேஷ், பில்லும் வேண்டாம் என்றதும் ரூ. 400 க்கு கொடுத்து விட்டார்கள். பணத்தை எண்ணி எண்ணி கொடுப்பதால், வேண்டாத வஸ்துக்கள் வாங்குவது குறைகின்றது.


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 22, 2025 15:11

\ பில் வேண்டாம் என்றும் சொன்னால், பல கடைகளில் 7-10% விலை குறைத்து தருகிறார்கள். // அரசுக்கு வரி வருமானம் கிடைத்தால்தானே மாநிலங்களுக்கு நிதியைப் பகிர்ந்தளிக்க முடியும் ??


சமீபத்திய செய்தி