மேலும் செய்திகள்
பாம்பனில் தண்டவாளங்கள் அருகில் தடுப்பு வேலிகள்
31-Mar-2025
பாலக்காடு: கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தின் மீன்காரா அணை அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தை, 13 பசுக்கள் அடங்கிய கூட்டம் நேற்று கடக்க முயன்றது.அப்போது எதிர்பாராதவிதமாக, தமிழகத்தின் சென்னையில் இருந்து பாலக்காடு நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், பசுக்கள் மீது வேகமாக மோதியது.இதில், அனைத்து பசுக்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. அவற்றின் உடல் பாகங்கள் தண்டவாளம் மற்றும் அதனருகே சிதறி கிடந்தன. தகவலறிந்து வந்த போலீசார், மீட்புக்குழுவின் உதவியுடன் பசுக்களின் உடல்களை அகற்றினர்.இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், உள்ளூர் மக்கள் சிலர் தங்களின் பசுக்களை, மேய்ச்சலுக்காக ரயில் தண்டவாளம் அருகே விட்டுச்சென்றதும், அவை அனைத்தும் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது.
31-Mar-2025