உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேற்கு வங்கத்தில் மின்னல் தாக்கி 13 பேர் பலி

மேற்கு வங்கத்தில் மின்னல் தாக்கி 13 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு இடங்களில் மின்னல் தாக்கியதில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பங்குரா மற்றும் புர்பா பர்தமான் மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பங்குரா மாவட்ட எஸ்.பி., வைபவ் திவாரி கூறியதாவது: மாவட்டத்தின் பல பகுதிகளில் இடி மற்றும் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஒன்டா பகுதியில் நான்கு பேரும், கோதுல்பூர், ஜாய்பூர், பத்ராசயர் மற்றும் இண்டாஸ் போலீஸ் ஸ்டேசன்களுக்கு எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.பர்பா பர்தமான் மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Padmasridharan
ஜூலை 25, 2025 07:26

மின்னல் தாக்காமல் உயிரை காப்பது எப்படியென்பதை இந்த மாதிரி செய்திகளில் தெரிவியுங்கள் சாமி.


ஆனந்த்
ஜூலை 24, 2025 22:41

ஆழ்ந்த இரங்கல்.


சமீபத்திய செய்தி