உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒப்பந்த ஊழியர்கள் 14,000 பேர் ராஜினாமா: சத்தீஸ்கரில் போராட்டம்

ஒப்பந்த ஊழியர்கள் 14,000 பேர் ராஜினாமா: சத்தீஸ்கரில் போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, செயல்படும் தேசிய சுகாதார இயக்கத்தின் மூலம் தரமான மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் கீழ் டாக்டர்கள், நர்சுகள் உட்பட 16,000க்கும் அதிகமான ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், பணி நிரந்தரம், சம்பள உயர்வு வழங்க வலியுறுத்தி, அரசுக்கு எதிராக கடந்த மாதம் 18ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஊழியர்கள் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனைகள் வெறிச்சோடின. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த ஊழியர்களுடன் அரசு தரப்பில் பேச்சு நடத்தப்பட்டது. இதன் முடிவில், அவர்களின் 10 கோரிக்கைகளில், நான்கு கோரிக்கைகளை ஏற்ற அரசு, ஊழியர்களை பணிக்கு திரும்புமாறு அறிவுறுத்தியது. இருப்பினும், ஒப்பந்த ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில், போராட்டத்தை முன்னின்று நடத்திய தேசிய சுகாதார இயக்க ஊழியர்கள் சங்க தலைவர் டாக்டர் அமித்குமார் மிரி, பொதுச்செயலர் கவுஷ்லேஷ் திவாரி உட்பட 25 பேரை, கடந்த 3ம் தேதி மாநில அரசு பணிநீக்கம் செய்தது. இதனால் அதிருப்தி அடைந்த ஒப்பந்த ஊழியர்கள், 14,678 பேர் நேற்று ஒரே நாளில் ராஜினாமா செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

திகழ்ஓவியன்
செப் 06, 2025 11:55

புபேஷ் பாகல் என்று சிங்கள் சர்க்கார் ஆட்சி இருந்த போது சத்தீஸ்கர் போராட்டம் இன்றி அமைதியா இருந்தது அனால் இன்று டபுள் என்ஜின் சர்க்கார்


Kanns
செப் 06, 2025 10:18

Shameful Exploitation of Outsourced Contract Labours by Govts& Courtsmany times even salary


அப்பாவி
செப் 06, 2025 07:18

காங்கிரஸ் தான் சட்டிஸ்கரை கெடுத்து குட்டிச்சுவராக்கிட்டாரு...


SANKAR
செப் 06, 2025 10:45

Chattisgarh ruled by NEHRU


Arul
செப் 06, 2025 07:13

நம்ம தூய்மை பணியாளர்கள் போல் சரியா


ஜெய்ஹிந்த்புரம்
செப் 06, 2025 06:08

இந்த சிச்சுவேசனுக்கு சங்கிகளின் கருத்துரை என்னவோ? இதே தமிழ்நாட்டில் நடந்தால் என்ன விசம் கக்குவீர்கள் என்பதையும் தெளிவுபடுத்தவும்


ஜெய்ஹிந்த்புரம்
செப் 06, 2025 06:08

இதே தமிழ்நாட்டில் நடந்தால் என்ன விசம் கக்குவீர்கள் என்பதையும் தெளிவுபடுத்தவும்


ஜெய்ஹிந்த்புரம்
செப் 06, 2025 06:07

கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் தரும். ஜீயின் டபுள் எஞ்சின் டமாக்கா. இதெல்லாம் பெருமையா?


HoneyBee
செப் 06, 2025 09:39

முதலில் பேரை மாற்றி தேசத்துரோகிபரம் என்று வைத்துக்கொள். என் நாட்டை கெடுக்க வேண்டாம்


முக்கிய வீடியோ