உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜஸ்தானில் லாரி மீது வேன் மோதல்: 15 பேர் பலி

ராஜஸ்தானில் லாரி மீது வேன் மோதல்: 15 பேர் பலி

ஜோத்பூர்: ராஜஸ்தானின் ஜோத்பூரில் லாரி மீது வேன் மோதியதில் 15 பேர் உயிரிழந்தனர்.ராஜஸ்தானின் பலோடி பகுதியை சேர்ந்தவர்கள் பிகானீரில் உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்துவிட்டு வேனில் திரும்பிகொண்டு இருந்தனர்.வேன் ஜோத்பூரின் பாரத்மாலா எக்ஸ்பிரஸ்வேயில் வந்து கொண்டு இருந்த போது மதோதா கிராம பகுதியில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேன் பலத்த சேதம் அடைந்தது. உள்ளே இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டனர்.அந்தப் பகுதியில் இருந்தவர்கள் மற்றும் அந்த சாலையில் சென்ற மற்ற பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். வேனில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் மேல் சிகிச்சைக்காக ஜோத்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 15 பேர் உயிரிழப்புக்கு ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் இரங்கல்

ராஜஸ்தானில் ஏற்பட்ட விபத்துக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தி: ராஜஸ்தானில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து வருத்தம் அடைந்தேன். இந்த துயரமான நேரத்தில், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நினைவாக எனது எண்ணம் உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். பிரதமர் நிவாரண நிதியில் இருந்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
நவ 03, 2025 15:42

ஆந்திராவுக்கு 21. ராஜஸ்தானுக்கு 15.இரங்கி ரெண்டு லட்சம் குடுத்தா சரியாப் போயிடும்.


அப்பாவி
நவ 03, 2025 09:26

கதி சக்தி....


ஆனந்த்
நவ 02, 2025 22:47

ஆழ்ந்த இரங்கல்


சமீபத்திய செய்தி