உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 10 லட்சம் பேருக்கு 15 நீதிபதிகள் இந்திய நீதித்துறை அறிக்கை தகவல்

10 லட்சம் பேருக்கு 15 நீதிபதிகள் இந்திய நீதித்துறை அறிக்கை தகவல்

புதுடில்லி : கடந்த, 1987ல் சட்ட கமிஷன் அளித்த பரிந்துரை யின் படி, 10 லட்சம் மக்கள் தொகைக்கு, 50 நீதிபதிகள் இருக்க வேண்டும். ஆனால், தற்போது, 15 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர் என, இந்திய நீதித்துறை அறிக்கை தெரிவிக்கிறது.டாடா அறக்கட்டளை முயற்சியில், 2019ல் இருந்து நீதித்துறை குறித்த அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. தற்போது, மேலும் பல அமைப்புகள் ஒத்துழைப்புடன், 2025ம் ஆண்டுக்கான இந்திய நீதித்துறை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:கடந்த, 1987ல் சட்ட கமிஷன் பரிந்துரையின்படி, 10 லட்சம் மக்கள் தொகைக்கு, 50 நீதிபதிகள் இருக்க வேண்டும். ஆனால், தற்போது நாடு முழுதும், 140 கோடி மக்கள் தொகைக்கு, 21,285 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். அதாவது, 10 லட்சம் மக்கள் தொகைக்கு, 15 நீதிபதிகளே உள்ளனர்.தற்போதைய நிலையில் உயர் நீதிமன்றங்களில், நிர்ணயிக்கப்பட்ட பதவி இடங்களில், 33 சதவீதம் காலியாக உள்ளன. இது, 2025ல், 21 சதவீதமாக இருக்கும். இதனால், உயர் நீதிமன்றங்களில் பணிச்சுமை அதிகமாக உள்ளது.தேசிய அளவில் மாவட்ட நீதிமன்றங்களில், ஒரு நீதிபதிக்கான அதிகபட்ச பணிச்சுமை, 2,200 வழக்குகள். ஆனால், அலகாபாத், மத்திய பிரதேச உயர் நீதிமன்றங்களில், ஒரு நீதிபதியின் பணிச்சுமை, 15,000 ஆக உள்ளது.மாவட்ட நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை, 2017ல், 30 சதவீதம் இருந்தது, தற்போது, 38.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.அதே நேரத்தில் உயர் நீதிமன்றங்களில், இந்த எண்ணிக்கை, 11.4 சதவீதத்தில் இருந்து, 14 சதவீதமாக உயர்ந்துள்ளது.உச்ச நீதிமன்றத்தில், பெண் நீதிபதிகள் எண்ணிக்கை, 6 சதவீதமாக உள்ளது. 25 உயர் நீதிமன்றங்களில், ஒன்றில் மட்டுமே, பெண் தலைமை நீதிபதி உள்ளார்.கர்நாடகா, மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், திரிபுராவைத் தவிர மற்ற அனைத்து உயர் நீதிமன்றங்களிலும், இரண்டில் ஒரு வழக்கு, மூன்று ஆண்டுக்கு முந்தையது. மாவட்ட நீதிமன்றங்களில், பெரும்பாலான மாநிலங்களில், 40 சதவீத வழக்குகள், மூன்று ஆண்டுக்கு மேற்பட்டவையாக உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Rajasekar Jayaraman
ஏப் 16, 2025 13:18

கட்சிக்காரர்களை நீதிபதியாக தேர்ந்தெடுத்து அனுப்பி வையுங்கள் அவர் கட்டு கட்டாக பணத்தை வீட்டில் பதுக்கி வைப்பார் அரசியல்வாதிகளின் தண்டனை நிறுத்தி வைப்பார்கள் பொது மக்களின் தண்டனையை உடனடியாக நிறைவேற்றுவார்கள் வாழ்க வளமுடன்.


பேசும் தமிழன்
ஏப் 16, 2025 11:13

ஆளுநர் மற்றும் ஜனாதிபதி அவர்களுக்கு காலக்கெடு விதிக்கும் நீதிமன்றங்களில்... வழக்கு குறிப்பிட்ட காலக்கெடுக்குள் முடிக்க வேண்டும்.. இல்லையேல் அந்த நீதிபதிக்கு அபராதம் விதிக்க வேண்டும்.. நீதிமன்றங்கள் தங்களின் எல்லையை மீறுவதாக தெரிகிறது. அவரவர் அவர்களது எல்லைக்குள் இருக்க வேண்டும். ஒருவரின் வேலையை அடுத்தவர் பார்க்க முயற்சிக்க கூடாது.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 16, 2025 11:11

நீதிபதிகள் வளைந்து கொடுத்தால் என்ன பயன் ??


Anbuselvan
ஏப் 16, 2025 10:07

இது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த பத்து லட்சம் மக்களுக்கு கோர்ட்டில் எவ்வளவு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதையும் கூற வேண்டாமோ?


V GOPALAN
ஏப் 16, 2025 08:25

Soon tamiknadu CM may pass one legislation to have separate Supreme court only for Tamilnadu. LIike University VC stalin will have to suggest Tamilnadu CJI . Governor will not have any role. Just he has to sign the paper and file. It need not go to president as our Governor will play dual role. Even 21supreme court 21 benches also can not say as Stalin has approval of 200 MLAs.


சிந்தனை
ஏப் 16, 2025 08:21

இன்னும் 10 மடங்கு நீதிபதிகளை போடலாம்... ஆனா தீர்ப்புகளை 200 வருடம் தள்ளி வைக்கணும்... மக்கள் வரிதானே... சும்மா சாப்பிடட்டும்...


Chanemougam Ramachandirane
ஏப் 16, 2025 08:06

வழக்குகள் சேருவதற்கு இவர்களே காரணம் ஒரு சாதாரண நில வழக்கில் கூட சரியாக விசாரணை செய்வதில்லை ஏன் இதுவரை டைட்டில் அறிய வழி காட்டுதல் மத்தியில் மாநிலத்தில் நீதிமன்றதில் ஏன் வருவாய் துறைக்கு பரிந்துரை செய்யவில்லை யார் தவறு ஷத்திலே பிரச்சனை என்றால் என்னிடம் வாருங்கள் என்று சொல்வதே தவறு காரனும் ஒரு சொத்தின் மூல பத்திரம் அதன் தொடர்ச்சி வில்லங்க சான்றுடன் ஒப்பிட்டு போகணும் இதுதான் டைட்டில் யாருடையது என்கிற அடிப்படை செயலாகும் அதை கூட நாடு முழுவதும் சுற்றறிக்கை செய்து வருவாய் துறைக்கு பரிந்துரை செய்யவில்லை வக்கீல்கள் வங்கிக்கு மட்டும் ஒரே மாதத்தில் லீகல் பார்த்து கொடுப்பதை அவர்களே நீதிமன்றத்தில் பின் பற்றுவதில்லை பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு அரசு விட்டு சென்ற ஆவணங்கள் ஆவண காப்பகத்தில் இருக்கும் பொழுது ஏன் இது வரை நீதிமன்றம் ஒப்பிட்டு பார்ப்பதில்லை அதே போல் சட்ட ரீதியான நபர்கள் ஏன் நீதிமன்றத்தில் சொத்து மதிப்பில் ஸ்டாம்ப் ஒட்டி வழக்கு நடத்தணும் அவர்கள் முன்பே அரசுக்கு பணம் செலுத்தி தானே ருதி தேய்த்தார்கள் மீண்டும் வழக்கில் செலுத்துவது என்பது தவறு என்று இதுவரை நீதிமன்றமும் சட்ட கமிஷன் ஏன் முன் வர வில்லை இது போலிகளுக்கு ஆதரவாக உள்ளது இவ்வாறு பல காரணிகளை கூரலாம். காலம் போன் போன்றது என்பதினை உணர்ந்து சரியான பாதையில் மக்கள் பயணிக்க காலத்திற்கேற்ப மாற்றத்தை கொண்டு வாருங்கள் மனசாட்சி பின்னர் தான் சட்டம் எனபதினி உணருங்கள்


R.RAMACHANDRAN
ஏப் 16, 2025 07:19

இந்த நாட்டில் சட்டப்படியும் இந்திய அரசமைப்புப் படியும் நீதி வழங்காமல் மனம் போன போக்கில் அநீதி வழங்குவதால் குற்றங்கள் அதிகரித்து அவற்றிற்கு எதிராக வழக்குகளும் அதிகரிக்கின்றன. சாமான்ய மக்களுக்கு நீதி மன்றங்கள் இல்லை என நீதிபதிகளும் வழக்கறிஞ்சர்களும் சேர்ந்து அவர்களை துரத்தி அடிக்கின்றனர். ஏதோ ஒரு சிலரின் பிழைப்புக்காக நீதி மன்றங்கள் என்ற நிலையில் நீதிபதிகளை அதிகரித்தால் மட்டும் மாற்றம் ஏற்படப் போவதில்லை.


Kasimani Baskaran
ஏப் 16, 2025 03:32

இப்பொழுதே மனுக்களை மட்டும் விசாரிக்கும் நீதிபதிகள் பலர் இருக்கிறார்கள். அதிக நீதிபதிகள் இருந்தால் அதிக மனுக்களை விசாரிப்பார்கள் - மற்றப்படி தீர்ப்பெல்லாம் விரைவாக எழுதி விடுவார்கள் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது... ஒரு சில பணத்தை எரிக்கும் நீதிபதிகளும் கூட உண்டு.


Bhakt
ஏப் 16, 2025 03:25

கொலோஜியத்தை ஒழித்தல் எல்லாம் சரி ஆகி விடும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை