நாமக்கல்:''கிரானைட் குவாரி தொடர்பான விசாரணை நடத்திய போது, எனக்கு, 150 கோடி ரூபாய் தருவதாக பேரம் நடந்தது,'' என, சென்னை அறிவியல் நகர துணை தலைவர் சகாயம் கூறினார்.நாமக்கல் அடுத்த, லத்துவாடி நம்பிக்கை இல்லத்தில், 'விவசாயிகள் வாழ்வு மேம்பட வழிபாடு' என்ற நிகழ்ச்சி நடந்தது.இதில், சென்னை, அறிவியல் நகர துணை தலைவர் சகாயம் பேசியதாவது: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியால், தஞ்சை, திருவாரூர் போன்ற பகுதிகளில், சாகுபடி செய்த நிலத்தில் காய்ந்த பயிர்களை பார்த்து, விவசாயிகள் படும் துன்பம், துயரத்தைபோல், நானும், 11 வயதில் அனுபவித்துள்ளேன்.கிரானைட் குவாரி முறைகேடு குறித்து, நான் விசாரணை நடத்திய போது, எனக்கு, 150 கோடி ரூபாய் லஞ்சமாக தருவதாக, மறைமுகமாக சிலர் மூலம் பேரம் பேசினர். ஊழல் தான் தேசத்தின் முன்னேற்றத்துக்கு தடையாக உள்ளது.இன்னும், 10, 15 ஆண்டுகளில், ஊழல் ஒழிக்கப்படும். அதற்கு எடுத்துக்காட்டு,சென்னையில், விவசாயி கள் பிரச்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, 20 ஆயிரம் இளைஞர்கள் ஒன்று கூடியது.விவசாயி கள் மரணம், தேசிய அவமானமாக கருதப்படுகிறது. உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு, நல்ல பொருளாதார நிலையில் உள்ளவர்கள், தாமாக தாமாக முன்வந்து
கல்வி, வாரிசுகளின் திருமணம் உள்ளிட்ட உதவி களை செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு, நம் பாரம்பரிய கலாசார அடையாளமாக திகழ்கிறது. அதனால், தமிழகத்தில் ஜல்லிக் கட்டு தொடர்ந்து நடக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். ரூ.150 கோடி பேரம் பேசினர்