உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 100 நாள் வேலை திட்டத்தில் 1.55 கோடி பேர் நீக்கம்

100 நாள் வேலை திட்டத்தில் 1.55 கோடி பேர் நீக்கம்

புதுடில்லி: மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நாடு முழுதும் 1.55 கோடிக்கும் அதிகமானோர் நீக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக லோக்சபாவில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் கமலேஷ் பஸ்வான் கூறியதாவது: போலியான தகவல், கிராம பஞ்சாயத்தில் இருந்து இடம் பெயர்தல் போன்ற காரணங்களால், 2022 - 23 நிதியாண்டில் 86.17 லட்சம் தொழிலாளர்களும், 2023 -- 24 நிதியாண்டில் 68.86 லட்சம் தொழிலாளர்களும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.வேலைவாய்ப்பு அட்டையை புதுப்பிப்பது மற்றும் நீக்குவது போன்ற பணிகளை மேற்கொண்டு வரும் மாநில அரசுகளிடம் சட்ட விதிகளை முறையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுதியான தொழிலாளர் யாரும் விடுபடக் கூடாது என்ற நோக்கில், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நிலையான செயல்திட்டம், அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மோசடிகளை தடுக்க அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Tetra
பிப் 06, 2025 17:50

இல்லாத ஆட்களை காட்டி துட்டு சம்பாதிக்கும் பொழப்புக்கு ஒரு முடிவு


முருகன்
பிப் 05, 2025 10:38

விவசாயிகளுக்கு நல்ல செய்தி இவர்கள் இனி விவசாய வேலை செய்ய வருவார்கள் என நம்புவோம்


R.RAMACHANDRAN
பிப் 05, 2025 08:58

நடப்பதற்கே நாடி இல்லாத மற்றும் வீட்டு வேலையையே செய்யாத வசதியானவர்கள் எல்லாம் திட்டத்தில் சேர்ந்து அரசு பணத்தை சூறையாடுகின்றனர். அவர்களை எல்லாம் நீக்கிவிட்டு உழைக்கும் வர்கத்தை சேர்ந்தவர்களை மட்டுமே வைத்து வேலை வாங்கி அதற்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும்.


rama adhavan
பிப் 05, 2025 08:31

சரியான நடவடிக்கை. உழைக்காத உழைப்புக்கு கிடைக்கும் பணம் பிச்சைக்கு சமம். மக்கள் வரிப்பனத்தை வீண் செய்யக் கூடாது.


VENKATASUBRAMANIAN
பிப் 05, 2025 07:48

திமுக என்றைக்கும் உண்மையை பேசியதே இல்லை. ஆள் இல்லாமல் வந்ததாக கூறி கொள்ளையடித்துள்ளார்கள். இதுதான் திராவிட மாடல். ஆனால் ஊடகங்களின் பொய் சொல்லி வருகிறார்கள். இதற்கு பத்திரிக்கையாளர் விமர்சகர் என்ற பெயரில் பேச வைக்கிறார்கள். இதுதான் தமிழக ஊடகங்கள்.


Kasimani Baskaran
பிப் 05, 2025 07:22

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டதால் விவசாயம் நொடித்துப்போய்விட்டது. மற்றப்படி நாட்டின் நிதி நிலை நாசமானதுதான் மிச்சம். இடைத்தரகர்கள் செழித்திருக்கிறார்கள்.


Kumar
பிப் 05, 2025 06:24

1.5 கோடி பேர் தமிழ்நாட்டில் மட்டும் நீக்கியதாக ஒருவர் கருத்து கூறியுள்ளார் அது இந்திய முழுவதும் ஆகும் திருட்டு திராவிடம் என்கிறார் அப்போது பாஜக ஆளும் மாநிலங்களில் அப்படி தானே


J.V. Iyer
பிப் 05, 2025 05:12

இந்த தேச விரோதிகள், த்ராவிஷன்கள் கொள்ளை அடிக்க இது உதவியது. எல்லாம் போலியான பெயர்கள், வேலை செய்யாமல் வரும் பணம். Whart a waste. நல்ல திட்டம், ஆனால் தீயவர்கள் கையில் போனால் இப்படித்தான்.


புதிய வீடியோ