உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவில் ரயில் மோதி 17 பசு மாடுகள் பலியான பரிதாபம்!

கேரளாவில் ரயில் மோதி 17 பசு மாடுகள் பலியான பரிதாபம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேரளாவில் ரயில் மோதி 17 பசு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கேரளா மாநிலம் பாலக்காட்டில் சென்னை-பாலக்காடு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலின் தண்டவாளத்தை கடக்க பசு மாடுகள் கூட்டம் முயற்சி செய்துள்ளது. இதில் வேகமாக வந்த ரயில் மோதி 17 பசுக்கள் பரிதாபமாக உயிரிழந்தன. இறந்தவற்றில் ஒன்று கன்றுக்குட்டி. ரயிலில் அடிபட்ட சில மாடுகள் தண்டவாளத்தில் உடல் நசுங்கிக் கிடந்தன. அருகிலுள்ள பள்ளத்தில் சில பசுக்களின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் பசுக்களின் உடல்களை அகற்றி ரயில் போக்குவரத்தை சீர் செய்தனர். இறந்த மாடுகளை அடக்கம் செய்வது குறித்து பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். தன் மாடுகள் உயிரிழந்ததை கண்டு, அவற்றின் உரிமையாளர்களில் ஒருவர் மயக்கம் அடைந்தார். அந்த சம்பவம் கிராம மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

naranam
ஏப் 13, 2025 03:40

ரயில் பாதையை ஒட்டி சிசி டிவி கேமிராக்கள் பொருத்தி கண்காணித்து ரயில் ஓட்டுனருக்குத் தகவல் தெரிவிப்பதன் மூலம் இத்தகைய விபத்துக்களை தவிர்க்க முடியும்.


M Ramachandran
ஏப் 12, 2025 20:25

தற்காலத்தில் ரயில்கள் அதி வேக மாக செல்கின்றன. மாட்டின் உரிமையாளர்கள் அவற்றின் நலன் கருதி மேய்ப்பவர் ஒருவரைநியமிக்க வேண்டும். மேஞம் புல் வெளிகளில் தான் மேய விட வேண்டும் ரயில்வே நிலத்தில் அல்ல. போத்தனுர் பாலக்காடு இடையில் வாளையார் பகுதியில் யானையகள் கூட்டம் தாண்டும் போது பலியாகிறது . அதனால் அவபற்றி வழி யில் தன்வளம் குறுக்கிடும் இடத்தில் சுரங்க பாதையை அமைத்துள்ளனர். அதனால் விபத்து இப்போ குறைந்து விட்டது


Rajah
ஏப் 12, 2025 17:40

மாடுகள் பலியானால் என்ன மலையாளிகள் தின்றே தீர்த்திருப்பார்கள்.


தஞ்சை மன்னர்
ஏப் 12, 2025 17:37

எழுதவே சங்கடமாகத்தான் இருக்கு பிராணிகள் அடிபட்டு இறப்பதை நினைத்தால் , அதே நேரம் இந்த ஹிந்துத்துவ செயலை நினைத்தான் கோபம்தான் வருது காரணம் இந்த கோமாதா பிரச்சினை அதுவும் இவங்களுக்கு தோத்தாத நடப்பது என்னவோ கேரளாவில் ம பி உபி யில் டெல்லியில் நடந்தால் நவ துயரமும் மூடி இருக்கும் இந்த கும்பலுக்கு


naranam
ஏப் 12, 2025 14:54

குறைந்தது 500 மீட்டர் தொலைவு வரை ரயில் பாதையை பார்பதற்கு ஏதுவான கருவிகள் ரயிலில் பொருத்தப்பட வேண்டும். இதுபோன்ற இழப்புகள் தவிர்க்கப் பட உதவும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 12, 2025 14:01

விபத்தா ?? அல்லது .......


Ray
ஏப் 12, 2025 15:00

விபத்து இல்லை வெளிநாட்டு தீய சக்திகளின் சதி. NIA விசாரித்து புதிய க்ரைம் நாவல் ஒன்று எழுத வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை