உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினரிடம் நக்சலைட்டுகள் 18 பேர் சரண்!

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினரிடம் நக்சலைட்டுகள் 18 பேர் சரண்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் 18 பேர் சரண் அடைந்தனர்.சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மைக்காலமாக நக்சலைட்டுகளின் தாக்குதல்களை பாதுகாப்பு படையினர் முறியடித்து வருகின்றனர். பாதுகாப்பு படையினர் நக்சலைட்களை துல்லியமாக சுட்டு வீழ்த்தி வருகின்றனர். இதனால் அங்கு தலைமறைவாக இருக்கும் பல நக்சலைட்டுகள் சரண் அடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.இந்நிலையில் இன்று (மே 27) சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் 18 பேர் சரண் அடைந்தனர். சுக்மா எஸ்.பி., கிரண் சவான் கூறியதாவது: நக்சலைட்டுகள் 18 பேர் இன்று சரணடைந்துள்ளனர். தெற்கு பஸ்தாரில் தீவிரமாக செயல்படும் நக்சலைட்டுகளும் சரணடைந்துள்ளனர். அவர்கள் மாநில அரசின் கீழ் செயல்படும் திட்டங்களின் அனைத்து நன்மைகளையும் பெறுவார்கள். அனைத்து நக்சலைட்டுகளும் சரணடையுமாறு நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். இவ்வாறு அவர் கூறினார்.சரணடைந்த நக்சல் பேட்டி!சரணடைந்த நக்சல் மாண்டவி கூறியதாவது: நான் 2015ல் நக்சல் நடவடிக்கைகளில் சேர்ந்தேன். தற்போது பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தேன். அவர்கள் மின்சாரம், தண்ணீர், அனைத்தையும் வழங்குகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தாமரை மலர்கிறது
மே 27, 2025 23:13

தமிழகத்தில் உள்ள தமிழ் தீவிரவாதிகளையும் நக்சலைட்கள் போன்று நசுக்கவேண்டும்.


Keshavan.J
மே 27, 2025 20:35

சும்மாவா பெரியோர்கள் சொன்னார்கள். அடிச்சு கறக்கற மாட்டை அடிச்சு தான் கறக்கணும் என்று.


Nada Rajan
மே 27, 2025 17:41

நக்சலிசம் ஒழிக்கப்பட வேண்டும்


தஞ்சை மன்னர்
மே 27, 2025 17:27

இந்திய பாதுகாப்பு படையினர் என்ற போர்வையில் அதானி மற்றும் அதன் சார்பு நிறுவனங்களுக்கு சுரங்க சுரண்டலுக்கு போகும் கூலி படை போல ஆகிவிட்டது அங்கே ஒரு நக்க்ஸல் என்ற பெயரில் யாராவது ஒருவரை சுட்டு கொன்றால் 2 முதல் 2.5 லட்சம் வழங்கப்படுவது தகவல்கள் வந்த வண்ணம் இருக்கு பெண்களும் இவர்களின் வெறிச்செயலுக்கு பழி ஆகின்றனர் மொத்தத்தில் இவர்களின் செயல்களால் மொத்த நிர்வாகத்திற்கும் அவச்சொல் ஏற்படுகிறது


Keshavan.J
மே 27, 2025 20:38

தஞ்சை மன்னர் அவர்களே, உமக்கு துக்கம் வராது என்று நினைக்கிறேன்


புதிய வீடியோ