மேலும் செய்திகள்
தீயணைப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி
15-Apr-2025
புதுடில்லி; தலைநகர் டில்லியில் குடிசைப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 குழந்தைகள் பலியாகினர்.ரோகிணி பகுதி அருகே குடிசைப்பகுதி ஒன்று உள்ளது. இங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இங்கு இன்று (ஏப்.27) திடீர் என தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தீயணைப்புத்துறைக்கு தொலைபேசி மூலம் அழைப்பு வந்தது.இதையடுத்து, 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளுடன், வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இதுகுறித்து பேசிய தீயணைப்பு அதிகாரி ஒருவர், போன் மூலம் அழைப்பு வந்தவுடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விட்டனர். அங்கு அவர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலைமையை கட்டுக்கு கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.இதனிடையே தீ விபத்தில் முதல்கட்டமாக 2 குழந்தைகள் பலியானது தெரிய வந்துள்ளது. ஆனால் அவர்கள் யார், பெயர் உள்ளிட்ட விவரங்கள் உறுதிப்படுத்தப் படவில்லை. தீ விபத்துக்கான காரணம் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
15-Apr-2025