உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  நிதி மோசடியை தடுக்க 2 கோடி ஆதார் நீக்கம்

 நிதி மோசடியை தடுக்க 2 கோடி ஆதார் நீக்கம்

புதுடில்லி: உயிரிழந்தவர்கள் பெயரில் நடக்கும் நிதிமோசடியை தடுக்க இரண்டு கோடி ஆதார் எண்கள் நீக்கப்பட்டு உள்ளதாக ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆதார் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஆதார் தகவல்களை துல்லியமாக வைத்திருக்க நாடு முழுதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒருபகுதியாக உயிரிழந்த இரண்டு கோடி பேரின் ஆதார் எண்கள் நீக்கப்பட்டுள்ளன. இதற்காக இந்திய பதிவாளர் ஆணையம், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், பொது வினியோக திட்டம், தேசிய சமூக உதவித்திட்டம் உள்ளிட்டவற்றில் இருந்து இறந்தவர்கள் பற்றிய தகவல்கள் பெறப்பட்டன. இறந்தவரின் பெயரில் நிதி மோசடி நடைபெறாமல் தடுக்கவும், நலத்திட்ட பணிகளில் ஆதார் எண் தவறாக பயன்படுத்தாமல் இருக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுதும் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், இறந்தவர்கள் குறித்த தகவல்களை பதிவு செய்ய இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இந்த வசதி விரைவில் கொண்டு வரப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை