உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏ.டி.எம்.,மில் ரூ.93 லட்சம் கொள்ளை துப்பாக்கி சூட்டில் 2 ஊழியர்கள் பலி

ஏ.டி.எம்.,மில் ரூ.93 லட்சம் கொள்ளை துப்பாக்கி சூட்டில் 2 ஊழியர்கள் பலி

பீதர்: கர்நாடகாவின் பீதரில் ஏ.டி.எம்.,மில் பணம் நிரப்ப வந்த ஊழியர்கள் இருவரை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு, 93 லட்சம் ரூபாயுடன், கொள்ளையர்கள் தப்பியோடினர்.கர்நாடகாவில் உள்ள பீதர் நகரின் சிவாஜி சதுக்கம் பகுதியில் எஸ்.பி.ஐ., வங்கியின் ஏ.டி.எம்., உள்ளது. இதில் பணம் நிரப்ப, சி.எம்.எஸ்., என்ற ஏஜென்சியின் ஜீப் நேற்று காலை 11:00 மணிக்கு வந்தது.பணப்பெட்டியை ஊழியர்கள் கிரி வெங்கடேஷ், சிவகுமார் ஆகியோர் இறக்கியபோது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், ஊழியர்கள் மீது மிளகாய் பொடியை துாவினர்.பைக்கில் வந்த ஹெல்மெட் அணிந்த நபரும், முக கவசம் அணிந்த நபரும், ஊழியர்களிடம் இருந்து பணப்பெட்டியை பறிக்க முயற்சித்தனர். அவர்கள் தர மறுத்து போராடவே, இருவர் மீதும் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதில், கிரி வெங்கடேஷ், அதே இடத்தில் உயிரிழந்தார். சிவகுமார் படுகாயம் அடைந்தார்.பைக்கில் வந்த கொள்ளையர்கள், 93 லட்சம் ரூபாய் அடங்கிய பண பெட்டியுடன் தப்பினர். அங்கிருந்த மக்கள், அவர்கள் மீது கற்களை எறிந்து தடுக்க முயற்சித்தனர். ஆனால், அவர்கள் தப்பி விட்டனர்.படுகாயம் அடைந்த சிவகுமார், பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். ஜீப் ஓட்டுநர் ராஜசேகர், காயமின்றி உயிர் தப்பினார். பணம் டிபாசிட் செய்ய வந்தவர்களுக்கு பாதுகாப்பாக, துப்பாக்கி ஏந்திய காவலர்கள் உடன் வரவில்லை. இச்சம்பவத்தை பார்க்கும் போது, திட்டமிட்டு கொள்ளை அடித்திருப்பது தெரிகிறது.எஸ்.பி., பிரதீப் குன்டே கூறுகையில், ''கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ''பீதரின் அருகில் தெலுங்கானா மாநிலம் அமைந்துள்ளதால், கொள்ளையர்கள் அங்கு தப்பி சென்றிருக்கவும் வாய்ப்பு உள்ளது. கொள்ளையர்களை கண்டுபிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன,'' என்றார்.பீதரில் இருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிய கொள்ளையர்கள், அருகில் உள்ள தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதின் அப்சல்காஞ்ச் பகுதிக்கு சென்றதாக தகவல் கிடைத்தது. பீதர் போலீசார் அங்கு விரைந்தனர்.அப்சல்காஞ்ச் சென்ற இரு கொள்ளையர்களும், அங்கிருந்த ரோஷன் டிராவல்ஸ் என்ற நிறுவனத்தின் ஆம்னி பஸ் மூலம், சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். டிராவல்ஸ் நிறுவன மேலாளர், கொள்ளையர்களின் பையை சோதனையிட முயன்றதால், அவரையும் துப்பாக்கியால் சுட்டு விட்டு, அங்கிருந்து தப்பினர்.தகவல் அறிந்த ஹைதராபாத் போலீசார் அங்கு வந்தனர். படுகாயம் அடைந்த மேலாளரை மருத்துவமனையில் அனுமதித்தனர். தப்பிய கொள்ளையர்கள், ஹைதராபாதில் இருந்து வெளியேறாமல் தடுக்கும் வகையில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.படம்: கிரி வெங்கடேஷ்17_DMR_0003, 17_DMR_0004, 17_DMR_0005பணப்பெட்டியுடன் இரு சக்கர வாகனத்தில் தப்பிய கொள்ளையர்கள். (அடுத்த படம்) ஆம்புலன்ஸ் வரும் வரை நாற்காலியில் அமர வைக்கப்பட்டிருந்த சிவகுமார். (கடைசி படம்) சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Karthik
ஜன 17, 2025 16:32

ஆயுதமேந்திய காவலர்கள் இல்லாமல் , சட்டத்தையும் மதிக்காமல், விதிமீறி பணம் நிறப்ப சென்றதால் அதற்கான தண்டனையாகவே ஊழியர்களின் விதி முடிந்ததாக தெரிகிறது. இவர்களை பணம் நிறப்பசொல்லி அனுப்பி வைத்து 2 உயிரை காவு வாங்கிய உயரதிகாரி உச்சபட்ச தண்டனைக்கு உரியவரே. அந்த சாரு தண்டிக்க படுவாரா??


அப்பாவி
ஜன 17, 2025 09:21

இதுக்கு பெருமிதப்பட ஒரு ஜீவன் கூட இல்லையா?


sankaranarayanan
ஜன 17, 2025 09:13

பணம் டிபாசிட் செய்ய வந்தவர்களுக்கு பாதுகாப்பாக, துப்பாக்கி ஏந்திய காவலர்கள் உடன் வரவில்லை சட்டப்படி பாதுகாப்பு இல்லாமல் பணத்தை எப்போதுமே எங்குமே வங்கியைவிட்டு வெளியே எடுத்து செல்லக்கூடாது என்று சட்டம் இருக்கிறது சட்டத்தை யார் மதிக்கிறார்கள் விளைவுகள் இப்படித்தான் இருக்கும் மக்களின் பணம் விரயமாகின்றன


நிக்கோல்தாம்சன்
ஜன 17, 2025 07:01

ஜார்கண்டில் இருந்து பங்களாதேஸ் தப்பியிருப்பார்கள், அவர்களுக்கு இன்னமும் பால் ஊற்றி வளர்த்துவிடுங்க தமிழர்களே, ஒருநாள் அவர்களின் வேலையை காட்டும்போது இந்த அரசும் அவர்களை ஆட்டுவிக்கும் வெளிநாட்டு மோகம் கொண்டவர்களும் உங்களுக்கு ஒருவகையில் உதவாமல் அந்த செய்தியை எப்படி மறைப்பது என்றும் பிளான் செய்திருப்பார்கள்


Ramona
ஜன 17, 2025 06:58

Not able single brave person to take action when they were struggling to carry box, they could have stopped ,everyone was busy taking video to get few rupees from social medi by uploading.


Kasimani Baskaran
ஜன 17, 2025 06:58

தமிழகத்தில் பயிற்சிபெற்ற அண்ணா பல்கலை புகழ் ஞானசேகரனின் கூட்டாளிகளாக இருக்கப்போகிறார்கள்...


Laddoo
ஜன 17, 2025 11:19

அப்போ அந்த சாருக்கும் தெரிஞ்சிருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை