உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கஞ்சா புகைத்த கைதிகள் 2 ஜெயிலர்கள் சஸ்பெண்ட்

கஞ்சா புகைத்த கைதிகள் 2 ஜெயிலர்கள் சஸ்பெண்ட்

கலபுரகி: கஞ்சா புகைத்தபடி கைதிகள் வீடியோ கால் பேசிய வழக்கில், பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக, கலபுரகி சிறையின் 2 ஜெயிலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.கலபுரகி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் 2 கைதிகள், கஞ்சா புகைத்தபடி வீடியோ காலில், உறவினர்களிடம் பேசிய புகைப்படம், கடந்த 15ம் தேதி வெளியானது. இதன்மூலம் கைதிகளுக்கு சிறையில், ராஜ உபசாரம் கிடைப்பது தெரிந்தது.சிறைத் துறை டி.ஜி.பி., மாலினி கிருஷ்ணமூர்த்தி, கலபுரகி போலீஸ் கமிஷனர் சரணப்பா ஆகியோர் சிறையில் விசாரணை நடத்தினர். சிறையில் கைதிகள் கஞ்சா புகைத்தது பற்றி, கலபுரகி சி.சி.பி., போலீசாரும் விசாரிக்கின்றனர்.இந்நிலையில் சிறை ஜெயிலர்களான ஷேக்னாஸ், பாண்டுரங்கா ஆகியோர், பணியில் அலட்சியமாக செயல்பட்டது தெரிந்தது. இதனால் அவர்கள் இருவரையும், சஸ்பெண்ட் செய்து சிறை டி.ஐ.ஜி., சேஷா நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி