உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் இருவர் கைது: ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்

காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் இருவர் கைது: ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்பில் இருந்த இரு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரோந்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rxfb8d1u&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந் நிலையில், சோபியான் மாவட்டத்தில் பஸ்குச்சான் என்ற பகுதியில் நடைபெற்ற அதிரடி சோதனையில் லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்பில் இருந்த பயங்கரவாதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஏராளமான துப்பாக்கிகள், குண்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர். ராணுவம் மற்றும் போலீசார் நடத்திய கூட்டு தேடுதல் நடவடிக்கையில் இருவரும் சிக்கி இருக்கின்றனர். அவர்களுடன் வேறு யாரும் அதே பகுதியில் பதுங்கி இருக்கின்றனரா என்றும் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.மே 19ம் தேதி இதேபோன்ற தேடுதல் வேட்டையின் போது பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் இருவர் பிடிபட்டனர். 2 கைத்துப்பாக்கிகள், 4 கையெறி குண்டுகள், 43 தோட்டாக்கள் உள்ளிட்ட ஏராளமான வெடிபொருட்கள், ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை