உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கனமழையால் மூணாறில் 2 இடங்களில் நிலச்சரிவு; ஒருவர் பலி, போக்குவரத்து பாதிப்பு

கனமழையால் மூணாறில் 2 இடங்களில் நிலச்சரிவு; ஒருவர் பலி, போக்குவரத்து பாதிப்பு

இடுக்கி: கனமழை எதிரொலியாக, மூணாறில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒருவர் பலியானார்.கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த பல நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. எர்ணாகுளம், காசர்கோடு உள்ளிட்ட 9 மாவட்டங்களுகு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=h5lyzn4h&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இடைவிடாது கொட்டி வரும் மழையால்,இடுக்கி மாவட்டம் மூணாறில் இரண்டு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு தாவரவியல் பூங்கா அருகே நேற்று இரவு மண்சரிவு ஏற்பட்டு லாரி மீது விழுந்து டிரைவர் கணேசன்(58) என்பவர் இறந்தார். உடன் இருந்த முருகன் என்பவர் படுகாயம் அடைந்தார். அதே பகுதியில் இன்று காலை 8:00 மணிக்கு மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 20 மீட்டர் தொலைவுக்கு கற்கள் நிரம்பி காணப்பட்டது. போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. சாலையில் கிடக்கும் கற்களை அகற்ற 2 நாட்களாகும். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. மழை தொடர்ந்து நீடிப்பதால், நிலச்சரிவு மீண்டும் ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை