உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறையில் இருந்தபடி வெற்றி பெற்ற 2 எம்.பி.,க்கள்

சிறையில் இருந்தபடி வெற்றி பெற்ற 2 எம்.பி.,க்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 2 பேர் சிறையில் இருந்தபடியே வெற்றி பெற்றனர். அதுவும் அவர்கள் மீது பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருந்தது.பஞ்சாப் மாநிலம் கதூர் சாகிப் தொகுதியில் வெற்றி பெற்ற அம்ரீத்பால் சிங் சீக்கிய மத போதகர் ஆவார். காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் இவருக்கு தொடர்பு உள்ளது. கடந்த ஆண்டு பிப்., மாதம் பஞ்சாபில் போலீஸ் ஸ்டேசன் மீது தாக்குதல் நடந்த விவகாரத்தில் இவரது பெயர் பெரிதும் அடிபட்டது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இவர், அசாமின் திப்ருகர்க் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் வெற்றி பெற்ற அப்துல் ரஷீத் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். என்ஜீனியர் ரஷீத் என்று அழைக்கப்படும் இவர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லாவை தோற்கடித்தவர் ஆவார். பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்த குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தாலும், எம்.பி.,க்களாக பதவியேற்றுக் கொள்ளும் உரிமை, அரசியல்சாசனப்படி அவர்களுக்கு உள்ளது. அதிகாரிகளின் அனுமதி பெற்று அவர்கள் எம்.பி.,க்களாக பதவியேற்கலாம். பிறகு அவர்கள் சிறைக்கு திரும்ப வேண்டும். அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றால் அவர்களின் பதவி பறிபோகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

MADHAVA NANDAN
ஜூன் 07, 2024 09:33

இருவர் மாட்டிக்கொண்டனர் 249 பேர் தப்பித்து தலைவர்களாகி இருக்கிறார்கள் பணமும் பக்கபலமும் ...........


Sampath Kumar
ஜூன் 06, 2024 11:54

இதில் இருந்து என்ன புரிகின்றது என்றால் மக்கள் விரும்பும் நபரை தேர்ந்து ஏடுக அவ்ரகளுக்கு உரிமை உள்ளது என்று அவரு தீவிரவாதியா அல்லது டீ விக்கிறவரோ பிரச்னை இல்லை


மேலும் செய்திகள்









புதிய வீடியோ