மேலும் செய்திகள்
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 181 ரவுடிகள் கைது
14-Jan-2025
லூதியானா:கார் பறிப்பு சம்பவம் தொடர்பாக சோதனை நடத்திய போலீசாரை ரவுடிகள் சரமாரியாக தாக்கினர். காயம் அடைந்த இரு போலீசார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் காரை பறித்துச் சென்றது தொடர்பாக கமால்பூர் கிராமத்தில், சதார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹர்ஷ்பீர் சிங் தலைமையில் போலீசார் நேற்று முன் தினம் இரவு சோதனை நடத்தினர். அங்கு பதுங்கியிருந்த ரவுடிக் கும்பல், போலீசார் மீது சரமாரி தாக்குதல் நடத்தியது.இதில், சப்-இன்ஸ்பெக்டர் தர்செம் சிங், போலீஸ்காரர் ஹர்ஷ்பீர் சிங் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இரண்டு ரவுடிகளை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
14-Jan-2025