உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயிற்சியின் போது பீரங்கி மோதி 2 வீரர்கள் பலி

பயிற்சியின் போது பீரங்கி மோதி 2 வீரர்கள் பலி

ஹிசார்: ஹரியானா மாநிலத்தில் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, பீரங்கி மோதியதில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஹரியானாவின் ஹிசார் அருகே உள்ள போஜ்ராஜ் கிராமத்தில் நேற்று (நவ.,21) ராணுவப் பயிற்சி நடைபெற்றது. அப்போது 32 பீரங்கி வாகனங்களை இயக்கி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் ஏற்பட்ட புழுதியால், பீரங்கியை இயக்கிய வீரருக்கு முன்னால் நின்றிருந்தவர்கள் பார்வைக்கு தெரியவில்லை. இந்நிலையில் பீரங்கி மோதியதில் இரு வீரர்கள் உயிரிழந்தனர். அவர்கள் உத்தர பிரதேச மாநிலம், ஷாம்லியைச் சேர்ந்த மணீஷ் குமார், புடான் பகுதியைச் சேர்ந்த அங்குஷ் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !