உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதிகள் தாக்குதல் ராணுவ வீரர்கள் 2 பேர் பலி

பயங்கரவாதிகள் தாக்குதல் ராணுவ வீரர்கள் 2 பேர் பலி

குல்மார்க், ஜம்மு - காஷ்மீரில் ராணுவ ரோந்து வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரு ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ போர்ட்டர்கள் இருவர் வீர மரணம் அடைந்தனர். ஜம்மு - காஷ்மீரின் குல்மார்க் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாடு கோட்டு பகுதியில் ராணுவ வாகனம் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது பயங்கரவாதிகள் திடீரென அந்த வாகனம் மீது துப்பாக்கியால் சுட்டனர். நம் வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் இருவர் மற்றும் ராணுவ போர்ட்டர்கள் இருவர் வீரமரணம் அடைந்தனர். மேலும் இரு வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ