மேலும் செய்திகள்
பீஹாரில் 121 தொகுதிகளில் இன்று முதற்கட்ட தேர்தல்
39 minutes ago
டில்லியில் காற்று மாசு இன்று அதிகரிக்கும் என கணிப்பு
3 hour(s) ago
பைக் மீது லாரி மோதி குடும்பமே உயிரிழப்பு
3 hour(s) ago
கதக்: சொத்து தகராறில், தந்தையை அடித்துக் கொன்ற மகன்கள் கைது செய்யப்பட்டனர்.கதக்கின், லக்குன்டி கிராமத்தில் வசித்தவர் கரியல்லப்பனவர், 52. இவருக்கு இரண்டு மனைவியர். தற்போது இரண்டாவது மனைவி ரேகாவுடன் வசித்தார்.இவருக்கு சொந்தமாக 6 ஏக்கர் நிலம் உள்ளது. தங்கள் பெயருக்கு எழுதி வைக்கும்படி, முதல் மனைவி கஸ்துாரம்மாவின் மகன்கள் பிரகாஷ், 23, மல்லேஷ், 25, தகராறு செய்தனர். இதற்கு கரியல்லப்பனவர் சம்மதிக்கவில்லை. இதனால், தந்தைக்கும், மகன்களுக்கும் மனஸ்தாபம் இருந்தது. இந்நிலையில் சமீபத்தில், இவர் 3 ஏக்கர் நிலத்தை விற்று, பணத்தை வைத்திருந்தார். இதை தங்களுக்கு பகிர்ந்தளிக்கும்படி மகன்கள் கேட்டனர்; தந்தை மறுத்தார். நேற்று காலை ரேகா வயலுக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த மகன்கள் மல்லேஷும், பிரகாஷும் பணம் விஷயமாக தந்தையிடம் பேசினர். மூவருக்கும் வாக்குவாதம் நடந்தது. கோபமடைந்த மகன்கள், இரும்பு ராடால் தந்தையை தாக்கினர். காயமடைந்த கரியல்லப்பனவர், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.இதுகுறித்து கதக் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இரு மகன்களையும் கைது செய்து, விசாரணை நடத்துகின்றனர்.
39 minutes ago
3 hour(s) ago
3 hour(s) ago