உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  ஆற்றில் மூழ்கிய 2 மாணவர்கள் உயிரிழப்பு

 ஆற்றில் மூழ்கிய 2 மாணவர்கள் உயிரிழப்பு

பாலக்காடு: கோவை, கணபதி பகுதியை சே ர்ந்தவர் சத்யம், 20; தனியார் பொறியியல் கல்லுாரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்தார். இவரது நண்பர், பிளஸ் 2 முடித்த நிதீஷ், 18. இவர்கள் இருவர் உட்பட, நான்கு நண்பர்கள், இரு பைக்குகளில், கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடிக்கு சுற்றுலா சென்றனர். நேற்று மதியம் இவர்கள், பவானி ஆற்றின் சாவடியூர் பகுதியில் குளித்தபோது, சத்யம், நிதீஷ் இருவரும் தண்ணீரில் இழுத் து செல்லப்பட்டனர். தகவலில் , போலீசார், தீயணைப்பு படையினரின், பல மணி நேர தேடுதலுக்கு பின், மாலை, 5:30 மணிக்கு இருவரது உடல்களும் மீட் கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை