உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கதேசத்தில் இருந்து 20 தங்க பிஸ்கட்டுகள் கடத்த முயற்சி; ஒருவர் கைது

வங்கதேசத்தில் இருந்து 20 தங்க பிஸ்கட்டுகள் கடத்த முயற்சி; ஒருவர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாடியா: இந்தியா - வங்கதேச எல்லையில் சட்டவிரோதமாக 20 தங்க பிஸ்ட்டுகளை கடத்த முயன்ற நபரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். இது தொடர்பாக எல்லை பாதுகாப்பு படையின் தெற்கு மேற்கு வங்கம் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்; எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 32வது பட்டாலியன் வீரர்களுக்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்துவது பற்றிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, அடர்ந்த மூங்கில் வனப்பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் ஒருவரின் நடமாட்டம் கண்டறியப்பட்டடது. உடனடியாக அந்த நபரை பிடித்து, அவரிடம் இருந்த பிளாஸ்டிக் பையை பரிசோதனை செய்ததில், அதில் 20 தங்க பிஸ்கட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.2.82 கோடியாகும்.கைது செய்யப்பட்ட நபர் மேற்கு வங்கத்தின் முஸ்லீம்பாரா கிராமத்தைச் சேர்ந்தவன். வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோத தங்கத்தை ஹொராண்டிபூர் பகுதி வழியாக கடத்த திட்டமிட்டுள்ளான், எனக் குறிப்பிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ