உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இ.பி.எப்.,ல் 20 லட்சம் புது உறுப்பினர்கள்: மத்திய அரசு தகவல்

இ.பி.எப்.,ல் 20 லட்சம் புது உறுப்பினர்கள்: மத்திய அரசு தகவல்

புதுடில்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (இ.பி.எப்.ஓ.,) இந்தாண்டு ஜூலை மாதத்தில் 19.94 லட்சம் நிகர உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக, தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது குறித்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது: இந்தாண்டு ஜூலை மாதத்தில் புதிதாக சுமார் 20 லட்சம் உறுப்பினர்கள், தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பில் இணைந்துள்ளனர்.ஜூலை மாத கணக்கின்படி, 10.52 லட்சம் பேர் முதல் முறை பணியாளர்கள் ஆவர். இதில் 18லிருந்து 25 வயது வரை உள்ள உறுப்பினர்கள் மட்டும் 8.77 லட்சம் பேர். புதிதாக பணியில் சேர்ந்தவர்களில் 18லிருந்து 25 வயது உடையவர்கள் 6.25 பேர்.கடந்த 2023ம் ஆண்டில் 2.43 சதவீதமாக இருந்த அதிகரிப்பு, தற்போது 2024ல் 2.66 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !