சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு
துமகூரு, : சிறுமி பலாத்கார வழக்கில், வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, துமகூரு நீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது.துமகூரின் சிரா கல்லம்பெல்லாவை சேர்ந்தவர் ஹரிஷ், 31. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சமூக வலைதளம் மூலம் 14 வயது சிறுமிக்கும், ஹரிஷுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்தனர்.கடந்த 2022 செப்டம்பர் 1ம் தேதி, சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்தார். திருமணம் செய்வதாக கூறினார். பின், திருமணம் செய்யாமல் சிறுமியை ஏமாற்ற முயன்றார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், ஹரிஷ் கைது செய்யப்பட்டார்.அவர் மீது துமகூரு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆனது. விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி சந்தியா ராவ் நேற்று தீர்ப்பு கூறினார். ஹரிஷுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 1.30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். இதில் 1.25 லட்சம் ரூபாயை, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரிடம் கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறினார்.