உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறுமி பலாத்கார வழக்கு வாலிபருக்கு 20 ஆண்டு

சிறுமி பலாத்கார வழக்கு வாலிபருக்கு 20 ஆண்டு

மங்களூரு: சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, மங்களூரு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.தட்சிணகன்னடா பெல்தங்கடியை சேர்ந்தவர் சுதீர், 27. இதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமி, அவ்வப்போது, 'டிவி' பார்க்க சுதீரின் வீட்டுக்கு வருவார். 2021 டிசம்பரில் தன் வீட்டுக்கு வந்த சிறுமியிடம், கவர்ச்சியாக பேசி சிறிது துாரத்தில் உள்ள தன் பாட்டி வீட்டுக்கு அழைத்து சென்று, சுதீர் பாலியல் பலாத்காரம் செய்தார். அதன்பின், பல நாட்கள் பலாத்காரம் செய்து உள்ளார்.இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்தார். இவரை பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு அழைத்து செல்வதாக, சிறுமியின் தாயிடம் கூறி, 2022 டிசம்பர் 7ம் தேதி, சிக்கமகளூரின் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். சிறுமியை தன் மனைவி என கூறி கருக்கலைப்பு செய்தார்.இது அப்பகுதியில் வசிக்கும் சிலருக்கு தெரிந்தது. அவர்கள், குழந்தைகள் சஹாயவாணிக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். சஹாயவாணி அதிகாரிகள், பெல்தங்கடிக்கு வந்து, சிறுமியிடம் விசாரித்த போது நடந்ததை கூறினார். இது குறித்து அதிகாரிகள் பெல்தங்கடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.வழக்கு பதிவு செய்த போலீசார், சுதீரை கைது செய்து விசாரித்தனர். மங்களூரின் கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் விரைவு நீதிமன்றத்தில் குற்றபத்திரிகை தாக்கல் செய்தனர்.விசாரணையில் அவரது குற்றம் உறுதியானதால், சுதீருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, 40,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி மானு, நேற்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும்படி அரசுக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ