உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.200 கோடி போதைப்பொருள் பறிமுதல்

ரூ.200 கோடி போதைப்பொருள் பறிமுதல்

மும்பைமஹாராஷ்டிராவில், 200 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர், இது தொடர்பாக நான்கு பேரை கைது செய்தனர். மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில், கடந்த மாதம் 200 கிராம் 'கோகைன்' போதைப் பொருளை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்த விசாரணையில் கிடைத்த தகவலின்படி, நவி மும்பையில் உள்ள சர்வதேச கூரியர் ஏஜன்சி நிறுவனத்தில், சமீபத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தினர். அப்போது, 11.540 கிலோ மிக உயர் தர கோகைன், 4.9 கிலோ ஹைப்ரிட் ஸ்ட்ரெய்ன் ஹைட்ரோபோனிக் கஞ்சா, 5.5 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் 1.60 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.இவற்றின் சர்வதேச மதிப்பு, 200 கோடி ரூபாய். இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், இந்த கும்பல் வெளிநாட்டில் உள்ள ஒரு குழுவால் இயக்கப்படுவதும், கைப்பற்றப்பட்ட சில கடத்தல் பொருட்கள் அமெரிக்காவிலிருந்து மும்பைக்கு எடுத்து வரப்பட்டு, கூரியர் அல்லது சிறிய சரக்கு சேவைகள் வாயிலாக, இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள பலருக்கு அனுப்பப்பட்டதும் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ