உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தத்தெடுப்புக்கு 2000 குழந்தைகள் காத்திருப்பு: மேற்குவங்கத்தில் தான் அதிகம்

தத்தெடுப்புக்கு 2000 குழந்தைகள் காத்திருப்பு: மேற்குவங்கத்தில் தான் அதிகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாட்டில் 2000க்கும் மேற்பட்ட குழந்தைகள் தத்தெடுப்புக்காக காத்திருக்கிறார்கள். அதில் மேற்குவங்கம் தான் முதலிடத்தில் உள்ளது என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு ராஜ்யசபாவில் மத்திய இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் எழுத்துபூர்வமாக பதிலளித்து பேசியதாவது:பெரும்பாலான தத்தெடுக்கும் பெற்றோர், ஆரோக்கியத்துடன் உள்ள குழந்தைகளையும், வயது குறைந்த குழந்தைகளைத்தான் தத்தெடுக்க விரும்புகிறார்கள். தத்தெடுப்பு போர்ட்டலில் இதுபோன்ற குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அதற்கான காத்திருப்பு காலம் அதிகமாக இருக்கலாம்.சமீபத்திய புள்ளிவிபரப்படி, 2,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் தத்தெடுப்புக்காக காத்திருக்கிறார்கள், இதில் மேற்கு வங்கம் மிக அதிக எண்ணிக்கையில் உள்ளது. தத்தெடுப்புக்காக காத்திருக்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான மற்றும் அன்பான வளர்ப்பு வீடுகளை வழங்குவதற்கு மேலும் பல தத்தெடுப்பு மையங்கள் மற்றும் விழிப்புணர்வு பிரசாரங்கள் தேவைப்படுகின்றன. மேற்கு வங்காளம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள குழந்தைகளுக்கு உதவுவதற்கு அரசாங்கம் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு சாவித்ரி தாக்கூர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

lana
மார் 15, 2025 17:50

i want to adopt. எப்படி என்று விளக்கம் வேண்டும் pls


Dharmavaan
மார் 15, 2025 16:33

எல்லாம் வங்க தேச,ரொஹிங்கா ஜிகாதி கள்ளக்குடியேறி குழந்தைகளாயிருக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை