உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2,200 கோடியில் 1,200 ஏக்கரில் அயோத்தி அருகில் துணை நகரம்

2,200 கோடியில் 1,200 ஏக்கரில் அயோத்தி அருகில் துணை நகரம்

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்படும் பிரமாண்ட ராமர் கோவிலால், அந்த நகரமே மறுசீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் மாறி வருகிறது. சர்வதேச தரத்தில் செய்யப்படும் மாற்றங்கள், புதிய இந்தியாவின் வெளிச்ச பூமியாக அயோத்தியை ஒளிர்விடச் செய்துள்ளது.வட மாநிலங்களின் மிகப் பழமை வாய்ந்த, நுாற்றாண்டு சிறப்பு மிக்க அயோத்தியின் அடையாளம், ராமர் கோவிலின் வருகையால், நவீன உலகிற்கு ஏற்ப மாற்றம் அடைந்துள்ளது.முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றாக கருதப்படும் அயோத்தி, புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டு புனித யாத்திரை தலமாக உருவெடுத்துள்ளது.'புதிய இந்தியாவின் உருவகமாக ராமர் கோவில் இருக்க வேண்டும்' என்ற பிரதமர் மோடியின் கனவை, நனவாக்கும் பணியில் முழுவீச்சில் செயல்படுகிறார், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.அவரின் முயற்சியால், ஏராளமான கட்டுமான பணியாளர்கள், ஓவியர்கள், ஸ்தபதிகள் என பலரும் ஒன்று சேர்ந்து காவியம் படைக்கும் கோவிலை உருவாக்கும் பணியில் இரவு, பகலாக உழைக்கின்றனர். ராமரை தரிசிக்க உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருவர் என்பதால், நகரம் முழுதும் மறுசீரமைக்கப்படுகிறது. இங்கு, 1,200 ஏக்கரில் 2,200 கோடி மதிப்பில் துணை நகரம் அமைப்பதற்கான பணிகளும் நடக்கின்றன.''அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும் பணிகளால், 21ம் நுாற்றாண்டின் உலகத் தரம் வாய்ந்த நகரங்களின் பட்டியலில் அயோத்தி இடம்பெறும்,'' என, முழு நகரத்திற்கான தொலைநோக்கு ஆவணத்தை உருவாக்கிய, கட்டட கலைஞரும், நகர்ப்புற திட்டமிடல் அதிகாரியுமான திக் ஷு குக்ரேஜா தெரிவித்துள்ளார். கோவில் திறப்பு விழாவை ஒட்டி, நகரம் முழுதும் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகள், தற்காலிகமாக இல்லாமல் நிரந்தரமாக இருக்கும் வகையில் செய்யப்படுகிறது.அயோத்தியில் உள்ள சாலைகள் மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்து இணைக்கும் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு, புதிய சாலைகள் போடப்பட்டுள்ளன. கோவிலுக்கு நேராக செல்லும், ராமர் பாதை எனப்படும் மிக நீளமான, 13 கி.மீ., நடைபாதை, அங்குள்ள கடைகள், வீடுகள் என அனைத்தும் புதுப்பொலிவுடன் மாறி வருகின்றன.ஒரே மாதிரியான வண்ணங்கள், டிசைன்கள், அலங்கார வளைவுகள், தோரணங்கள் என, அப்பகுதி முழுதும் அலங்கரிக்கப்பட்டு, ஆன்மிக பூமியை கண்முன்னே காட்சிப்படுத்துகின்றன.புதிதாக கட்டப்படும் ராமர் கோவிலின் தோற்றம், ஸ்வஸ்திகா சின்னம், ராமரின் சங்கு, சூரியன், வில் - அம்பு ஆகிய படங்களுடன், 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற வாசகமும், அங்குள்ள கடைகளின் பலகைகள், வீட்டுச் சுவர்களை அலங்கரிக்கின்றன.வெவ்வேறு வண்ணங்களில், மாறுபட்ட உருவங்களில் ராமர், சீதை, ஹனுமன் ஆகியோரின் படங்கள் தத்ரூபமாக வரையப்பட்டு, பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன.கோவில் கட்டுமானப் பணிகள் துவங்கியதில் இருந்தே, இங்கு நிலங்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. பகவான் ராமரின் அடையாளங்கள், அவரின் வாழ்க்கையை தொடர்புபடுத்தும் விஷயங்கள் என அனைத்துமே, அயோத்தி நகரில் பார்க்கும் இடமெல்லாம் நிறைந்துள்ளன.-நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

கனோஜ் ஆங்ரே
ஜன 06, 2024 16:08

என்னென்ன கம்பி கட்ற கதையெல்லாம் சொல்றாங்க பாருங்க....? அயோத்திக்கு முந்தைய.... மிகப் பழமையான நகரங்களில் ஒன்றான... வேதத்திலும், அயல்நாட்டு யாத்ரீகன் யுவான்சுவாங் “நகரேஷூ காஞ்சி”...ன்னு தனது பயணக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள காஞ்சிபுரம் போன்ற புண்ணிய ஷேத்திரத்தை எல்லாம் விட்டுட்டு... ஆடுறாங்க பாருங்க...? ஆனால்.. அந்த நிருபர், நிருபர் வேலைக்கு வராமல்...திரைக்கதை எழுத போகலாம்...


மதுரை வாசு
ஜன 06, 2024 19:37

நீங்க சொல்கிற காஞ்சி இப்போ எப்படி இருக்கிறது???? நினைத்து பார்த்தால் எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் எனும் காமெடிதான் திராவிட மாடலின் இப்போதைய காஞ்சி.


g.s,rajan
ஜன 06, 2024 15:48

Lord Rama only Could Save India .....


இறைவி
ஜன 06, 2024 15:08

இத்தனை காலம் போலி மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்துக்களை கதற விட்டபோது, இந்துக்கள் எவ்வளவு வருந்தியிருப்பார்கள். ஏன்? நான் எல்லோருக்கும் ஆன முதல்வர் என்று பாத்தியதை கொண்டாடுபவர் ஒன்று அனைத்து மத பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும் அல்லது எந்த மத பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்லாமல் விட்டு விட வேண்டும். ஓணத்திற்கும், ரம்ஜானுக்கும், கிறிஸ்மசுக்கும், ஆங்கில புத்தாண்டிற்கும் வாழ்த்து சொல்லும் முதல்வர் இந்து பண்டிகைகளை ஒதுக்கும்போது நாங்கள் பட்ட வலிக்கு இப்போது மருந்து போடப்படுகிறது.


g.s,rajan
ஜன 06, 2024 14:13

New India .....


Tamil Inban
ஜன 06, 2024 12:50

மக்கள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும. கோவில்கள் கட்டலாம் எப்போது என்றால் அனைவருக்கும் நல்ல வாழ்வாதாரத்தை அமைத்து கொடுத்தபிறகு இல்லையென்றால் எப்படி திருப்பதி வசியானவர்களுக்கான மாறிகொண்டுள்ளதோ அப்படி ராமர் கோவிலும் மாறும்.


J.Isaac
ஜன 06, 2024 12:29

கண்ட இடத்தில் பான் பராக், ஹன்ஸ், கணேஷ் எச்சில் துப்பாமல் விழிப்புணர்வு உண்டாக்க கல்வி கொடுக்க வேண்டும்


ellar
ஜன 06, 2024 12:20

சுற்றுலா வளர்ந்து அந்தந்த நகரம், அதைச் சார்ந்த மக்கள் வளம்பெற வெளி நாட்டு அரசுகளை போல நமது அரசுகளும் மாற வேண்டும். ஹரியானா தேசிய அளவில் நல்ல முன்னோடி.


ellar
ஜன 06, 2024 12:18

Excellent opportunity to the state to attract enormous fund flow to the state . For example TTD has all booked 3 months ahead. Booking is finishing within minutes of release of quota happy development.


ramesh
ஜன 06, 2024 09:56

நியாய படி பார்த்தல் என்னுடைய அபிமான பிஜேபி தலைவர் மாமனிதர் ராமர் கோவில் விழாவை தொடங்கி வைத்து சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும்


ramesh
ஜன 06, 2024 17:50

அத்வானியே பிரதிஷ்டை செய்ய சரியான தகுதி உள்ளவர் .


sahayadhas
ஜன 06, 2024 09:51

தென்னிந்திய பணம் வடமாநிலங்களுக்கு


K.Muthuraj
ஜன 06, 2024 11:35

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மதுரை கோவை ஆயிரக்கணக்கான கோடி பணம் பெற்றது. திட்டங்கள் அனைத்தும் மாநில அரசுகளால் நிர்வஹிக்கப்பட்டது. பணம் வீணடிக்கப்பட்டது. வேலைகள் தான் விளங்கவில்லை. இதெல்லாம் வட மாநில பணமா தென் மாநில பணமா? எல்லாரும் இவ்வாறு கணக்கு போட்டால் என்ன நடக்கும்.


சங்கர்
ஜன 06, 2024 12:02

தென் தமிழகத்துக்கு செலவழிக்க வேண்டிய பணத்தை செலவழிக்காம, எந்த ஒரு முன்னேற்றத்தையும் முன்னெடுக்காமல், பெரும் பகுதியை வட தமிழகத்தில் இருக்கும் சென்னைக்கே ஒதுக்குவதை பற்றி ஒரு தடவையாவது சிந்திச்சுஇருக்கிறியா?


Anand
ஜன 06, 2024 12:49

திருட்டு அடிமை மதமாரி கூட்டம் இப்படி பொசுங்கி பொசுங்கியே சாவானுங்க.....


Prasanna Krishnan R
ஜன 06, 2024 14:22

போய் கேளுங்க


கனோஜ் ஆங்ரே
ஜன 06, 2024 16:11

சிவகாசி முத்துராஜ்.. “கணக்கு போடுங்க”...ன்னுதானே நாங்க சொல்றோம்... நாங்க ஒரு ரூபாய் கொடுத்தா.... பத்து பைசாகூட கொடுக்கமாட்டீங்க...? பத்து பைசா கொடுத்தா.... இரண்டு ரூபாய் கொடுக்குறீங்க... கணக்கு போடுங்க, தமிழ்நாடு மாநிலத்தில் எவ்வளவு வரி வசூல்..னும்,


K.Muthuraj
ஜன 06, 2024 17:26

வரி என்பது மாநிலங்களில் உள்ள தொழில் செறிவினை வைத்து கணக்கிடப்படுவதில்லை. ஒவ்வொரு மாநிலத்தில் உருவாக்கப்படும் பில்களுக்கு என்பது அல்ல. தத்தம் மாநிலத்தில் ஏற்படும் நுகர்வுகளுக்கு கட்டப்படுவது. உதாரணமாக எந்த மாநிலம் நுகர்வுக்காக பொருட்கள் வாங்கும் பொழுது அதிகம் வரி கட்டுகின்றதோ அதனை பொறுத்ததே. எந்த மாநிலம் வாழ்க்கை தரத்தில் சிறப்பானதாக உள்ளதோ அங்கே மட்டுமே வரி கொள்முதல் அதிகம் இருக்கும். பொதுவாக எல்லா மாநிலங்களும் ஒத்துக்கொண்டு தான் ஜி எஸ் டி உருவாக்கப்பட்டது. எல்லா மாநில மக்களின் அறியாமையினால் அவர்கள் செலக்ட் செய்யும் ஊழல் மாநில அரசுகளை தாண்டி மத்திய அரசு திட்டங்களின் சிறப்பான செயல்பாடுகளினாலேயே இந்த பத்து ஆண்டுகளில் ஏதோ இந்தியா தாக்குப்பிடித்துள்ளது என்று நினைக்கிறேன். இதற்கு முந்தைய மத்திய அரசுகள் பொறுப்பினை தட்டி கழித்து அனைத்தும் மாநில அரசுகளின் பொறுப்பாக்கி விட்டது. அதனால் மாநில அரசுகள் தம்போக்கில் ஊழல் செய்து நாட்டின் அடிப்படையினையே குலைத்து விட்டனர். உதாரணமாக இந்தியா பொக்ரான் அணுகுண்டு வெடித்த பொழுது அமெரிக்கா போன்ற நாடுகள் உடனே இந்தியா மேல் பொருளாதார தடை போட்டது. பாகிஸ்தான் உடனே அணுகுண்டு வெடித்தது ஆனால் அந்த நாட்டிற்கு எந்த நாடுகளும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதற்காக வாஜ்பாய் மடங்கிவிடவில்லை. இந்தியாவின் சிறப்பான செயல்பாடு அதன் கிராமபொருளாதாரம் (விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு) அதனை உடனடியாக சீர்படுத்தினார். பொருளாதார தடை இந்தியாவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. நாளடைவில் அமெரிக்கா தனது நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டது. காங்கிரஸ் ஆட்சியினை மீண்டும் தேர்ந்தெடுத்தனர். காங்கிரஸ் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என்ற போர்வையில் தனது அதிகாரங்களை விட்டு கொடுத்தது. அதன் விளைவு என்ன என்பது உங்களுக்கே தெரியும். நீர் மேலாண்மை பொதுப்படுத்துதல் முடியவில்லை. விவசாய நிலங்கள் பறிபோய் விட்டது. மக்கள் தொகை கட்டுப்படுத்த வேண்டிய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எல்லா மாநில அமைச்சர்களும் குறுநில மன்னர்கள் போல் மக்களுக்கு கொடுக்கப்படவேண்டிய திட்டங்களை கொடுக்காமல் நேராக பணம் கொடுக்கும் திட்டங்களை செயல் படுத்துகின்றன. அமைச்சர்கள் ஏராளமான விவசாய நிலங்களை ஆட்டை போட்டு விட்டனர். இருக்கும் சிறிது நிலங்களும் பிளாட்டுகளாய் கொத்துக்கறிபோல் ஆக்கிவிடப்பட்டது. புன்செய் நில விவசாய வருமானம் கால்நடை வளர்ப்பு அடியோடு அழித்து விடப்பட்டது. ஆனாலும் அவ்வாறு அவர்கள் சம்பாதித்த பணம், தற்போதைய மத்திய அரசு இங்குள்ள ஊழல் பணம் வெளிநாடுகளுக்கு முறை இன்றி செல்வதை முற்றிலும் தடுத்து விட்டதால் ஏதோ இந்தியா பிழைத்திருக்கின்றது. ஊழல் பணம் எவ்வாறு மற்ற நாடுகளுக்கு செல்லும் இங்குள்ளவன் தன்னை இங்கு ஏதோ பெரிய தொழிலதிபர் போல் பதிவு செய்வான். பின்பு அந்த தொழிலின் விரிவாக்கம் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு என்று கூறி தனது பணம் அந்த நாடுகளுக்கு முதலீடு என்ற பெயரில் கொண்டு செல்வான். இந்த நிகழ்வு கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாலே இந்தியா பணம் இந்தியாவிற்குள்ளேயே சுற்றி வருகின்றது. இதற்கு நாம் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ