உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கண்ணாடியில் கருப்பு நிற பிலிம் ஒட்டிய 2,235 கார் உரிமையாளர்களுக்கு அபராதம்

கண்ணாடியில் கருப்பு நிற பிலிம் ஒட்டிய 2,235 கார் உரிமையாளர்களுக்கு அபராதம்

புதுடில்லி: ஜன்னல் கண்ணாடியில் கருப்பு நிற பிலிம் ஒட்டியிருந்த 2,235 கார் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. டில்லி மாநகரப் போலீசின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் கமிஷனர் சத்யவீர் கட்டாரா கூறியதாவது: கடந்த, 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை மாநகர் முழுதும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. விதிமுறையை மீறி, கார் ஜன்னல் கண்ணாடியில், அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிகளவு கறுப்பு நிறத்தில் பிலிம் ஒட்டியிருந்த 2,235 கார்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, பிலிமும் அகற்றப்பட்டது. இந்த ஆண்டில் நவ. 6ம் தேதி வரை, 20,232 கார்களில் கருப்பு நிற பிலிம் அகற்றப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் சட்டப்பூர்வமான நடத்தையை உறுதி செய்ய இந்த சோதனை நடத்தப்பட்டது. மோட்டார் வாகன சட்டப்படி, அனுமதிக்கப்பட்ட வரம்புக்கு மேல் கருப்பு நிறத்தில் பிலிமை கார் கண்ணாடியில் பயன்படுத்தக் கூடாது. இந்த விதிமுறைகள் மீறுவது சாலை பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. கார் ஜன்னல் கண்ணாடி இருண்டு இருந்தால், இரவு நேரத்தில் டிரைவரின் நிலையை வெளியில் இருப்பவர் அறிய முடியாது. மேலும், இது குற்றச் செயல்களை மறைக்கவும் உதவுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ