உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாளை முதல் இந்தியாவுக்கு 25% வரி: அதிபர் டிரம்ப் அறிவிப்பு ரஷ்யாவுடன் வர்த்தகத்துக்கு அபராதம்

நாளை முதல் இந்தியாவுக்கு 25% வரி: அதிபர் டிரம்ப் அறிவிப்பு ரஷ்யாவுடன் வர்த்தகத்துக்கு அபராதம்

வாஷிங்டன்: நாளை முதல், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும், ரஷ்யாவிலிருந்து அதிக அளவிலான ராணுவ தளவாடங்கள் மற்றும் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு கூடுதலாக அபராதம் செலுத்த நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=iwdn4wy7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அனைத்து நாடுகளும் ஆகஸ்ட் 1ம் தேதிக்கு முன்னதாக அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட நாடுகளின் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சில் முடிவு எட்டப்படாததால், இந்திய பொருட்களுக்கு வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைதளத்தில் நேற்று அவர் பதிவிட்டுள்ளதாவது: இந்தியா நட்பு நாடு தான் என்றாலும், அந்நாட்டுக்கான அமெரிக்காவின் ஏற்றுமதி பல ஆண்டுகளாக குறைவாகவே உள்ளது. அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவில் விதிக்கப்படும் அதிக வரியே இதற்கு முக்கிய காரணம். உலகிலேயே மிக அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. அனைத்து நாடுகளையும் விட கொடுமையான, விரும்பத்தகாத வர்த்தக தடைகளை கொண்டுள்ள நாடாகவும் திகழ்கிறது. மேலும், எப்போதுமே ரஷ்யாவிலிருந்து அதிக அளவிலான ராணுவ தளவாடங்களை இந்தியா வாங்கி வருகிறது; ரஷ்ய கச்சா எண்ணெயை அதிகளவில் இறக்குமதி செய்கிறது. அனைவரும் உக்ரைன் உடனான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும் என நினைக்கும்போது, இப்படி செய்வது சரியல்ல. எனவே நாளை முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரியும், ரஷ்யாவுடனான வர்த்தகம் காரணமாக கூடுதலாக அபராதமும் விதிக்கப்படும். இவ்வாறு பதிவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை