உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 18,000 போலி நிறுவனங்களால் ரூ.25,000 கோடி ஜி.எஸ்.டி., இழப்பு

18,000 போலி நிறுவனங்களால் ரூ.25,000 கோடி ஜி.எஸ்.டி., இழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜி.எஸ்.டி.,யின் கீழ் பதிவு செய்யப்பட்ட 18,000 போலி நிறுவனங்கள் வாயிலாக 25,000 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளதை அதிகாரிகள் கண்டறிந்து உள்ளனர்.நாடு முழுதும் போலி ஜி.எஸ்.டி., நிறுவனங்களை அடையாளம் காண்பதற்காக, கடந்தாண்டு மே 16ல் துவங்கி, ஜூலை 15 வரை நடைபெற்ற முதல் சிறப்பு விசாரணையில், ஜி.எஸ்.டி.,யின் கீழ் பதிவு செய்யப்பட்டு இருந்த 21,791 நிறுவனங்கள் வாயிலாக 24,010 கோடி ரூபாய் அளவிற்கு ஜி.எஸ்.டி., ஏய்ப்பு நடைபெற்றுள்ளதை கண்டறிந்தனர்.அதன் தொடர்ச்சியாக, 2024 ஆக., 16ம் தேதி முதல் அக்., 30 வரை, இரண்டாவது சிறப்பு விசாரணையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.இது குறித்து அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: நாடு தழுவிய இரண்டா வது சிறப்பு விசாரணையில், ஜி.எஸ்.டி.,யின் கீழ் பதிவு செய்யப்பட்ட 73,000 நிறுவனங்களை ஆய்வு செய்தோம். இதில், கிட்டத்தட்ட 18,000 நிறுவனங்கள் போலியானவை என கண்டறிந்து உள்ளோம்.இந்த நிறுவனங்கள் வாயிலாக 24,550 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு நடைபெற்று உள்ளது. மேலும், சிறப்பு விசாரணையின் போது, 70 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., தொகையை, நிறுவனங்கள் தாமாக முன்வந்து செலுத்தி உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

அப்பாவி
நவ 08, 2024 03:08

அடப் போங்கப்பா... அந்நிய முதலீடுன்னுட்டு ஒரு ஆயிரம் கோடி ஸ்டாக் மார்க்கெட்டில் போட்டு ஒரே வருஷத்தில் ரெண்டாயிரம் கோடியா வெளியே எடுத்துக்குட்டு போய்க்கிட்டே இருக்காங்க. ஈசி மணி. ஈசி வியாபாரம்.


Lion Drsekar
நவ 07, 2024 15:11

இதற்கு முழுக்காரணம் இந்த துறையில் இருக்கும் மூத்த அதிகாரிகளின் ஆதரவே இது சத்தியம், என்னுடன் வாருகினால் நான் நிரூபித்துக்காட்டுகிறேன் , இறக்குமதி இடத்தில கணினியில் பதிவு செய்தபின்பு மட்டுமே மற்ற செயல்கள் நடைபெறும் அந்த இடத்தில்பணிபுரிபவர் 30 நிமிடத்துக்கு ஒருமுறை வெளியே சென்று வருகிறார் , ஒவ்வொரு அப்ப்ளிகேஷன் பதிவுக்கும் குறைந்தது 1000 ரூபாய் நான் நேரில் கண்டது, இன்றும் நடக்கிறது, இதற்க்கு மேல் உட்கூத்து கணக்கிலடங்கா. ஏழை சொல் அம்பலத்தில் எடுபடாது, வந்தே மாதரம்


J.Isaac
நவ 07, 2024 13:06

75 சதவீதம் ஜெய் ஸ்ரீராம் குருப்பாக தான் இருக்கும். பெயர்களை வெளியிடமாட்டார்கள். கட்சிக்கு ஆள் சேர்க்க வசதி


வாய்மையே வெல்லும்
நவ 07, 2024 17:40

ஜஸாக்கு என்னமோ குச்சி ஐசு வியாபாரம் மாதிரி கலர்கலரா ரீல் விடுற. போடும் பொத்தாம் பொதுவா நியூஸ் ஐ கொஞ்சமாச்சும் உண்மைத்தன்மை கண்டறிய முற்பட்டுஉள்ளாயா ? கண்டிப்பாக இருக்காது உனக்கு வேண்டியது நீ முன்னாள் ஹிந்துவாக இருந்த வர்கத்தை மட்டம்தட்டி பேசணும் . கட்டான்சோறு போடுகிறவனை தான் உனக்கு பிடிக்கும் உழைத்து உண்பது கிடையாது ..அதென்ன யூகத்தில் பெனாத்தல் . தெரிஞ்சா விஷயத்தோடு ஆதாரத்தோடு பதிவிட்டு போ. ரீல் விட்ட உன்னை ஏளனமாக நகைப்பவர்கள் ஆயிரமாயிரம் பேரு அதில் அடியேனும் அடக்கம் .


J.Isaac
நவ 08, 2024 20:00

வாய்மையே வெல்லும் பெயர் இல்லாமல் பதிவிடுவது வாய்மை இல்லையே


J.Isaac
நவ 07, 2024 13:03

மகாத்மா காந்தி இல்லையா?


அப்பாவி
நவ 07, 2024 10:32

நேருதான் காரணம். நிடி ஆயோக் முன்னாள் தலிவர் பனகாரியாவும் அதையேதான் சொல்றாரு.


R.RAMACHANDRAN
நவ 07, 2024 09:37

இந்த நாட்டில் 2047 க்குள் வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என வரி மேல் வரி போட்டு வர்த்தகர்கள் வசூலிக்கும் பணம் கொள்ளை போகின்றது.அரசில் சேரும் பணமும் அதிகார வரகங்களால் கொள்ளையடிக்கப்படுகிறது.


வாய்மையே வெல்லும்
நவ 07, 2024 09:35

திருட்டு திராவிடம் இல்லாங்காட்டி வேகாத பருப்பு உருண்டை பப்புவிடம் கேட்டால் தேங்காய் போளி திருடி திங்கும்போது வாய்ப்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என சரியாக சொல்லி விடுவார்கள் . இந்த ஆட்கள் தான் ஜிஎஸ்டி கு எதிராக செயல்பட்டு போலிநிறுவன ஊழல் பணம் சம்பாரிப்பவர்கள் என அடப்பாவிகளுக்கு தெரியாத என்ன ??


Sampath Kumar
நவ 07, 2024 09:17

கண்டுபிடித்து என்ன பிரயோசனம்? நாட்டில் ஏமாற்று கார்கள் பெருகி விட்டார்கள் ஒருநாள் இந்தநாட்டையே கூறு போட்டு வித்து விட்டு போக போறானுக என்ன செய்ய இந்த ஆட்டின் ஆட்சியாளர்களும் சரி சட்டமும் சரி முற்றிலும் மற்ற பட வேண்டும் அடு நடுக்குமா ????


பாமரன்
நவ 07, 2024 08:20

அடடே கண்டுபுடிச்சிட்டாங்களா... இதுக்கு தான் கிஸ்தி கொண்டாந்தது... இப்போ இடி சிபீபீபீபி என்ஐஏ வச்சி சென்ட்ரலைஸ்ட் கலெக்சன் பண்ணிடுவோம்ல... அது சரி திமிங்கிலம் இவ்ளோ போலின்னு சொல்றாங்களே அது பருப்பு போலியா அல்லது தேங்காய் போலியா...?? என்னது அது வேற போளியா... அடடா நானும் பகோடாஸ் மாதிரி எழுதி வச்சிருந்த டெம்ப்ளேட் யூஸ் பண்ணிட்டேனோ....??


வாய்மையே வெல்லும்
நவ 07, 2024 08:16

கொசுத்தொல்லை நாரா வின் வார்த்தைக்கிணங்க அடிலெய்டு பொய்ய்யாசாமி ஆஸ்திரேலியாவில் இருந்து தாமாகவே முன்வந்து சரணடைந்து ஆட்டைய போட்ட பணத்தை திரும்ப அமைதியாக கொடுத்துவிடுவார் என எண்ணிவிடாதீர்கள் . தலையில் இருந்து நுனிக்கால் வரைக்கும் திருட்டுப்புத்தி கொண்டுள்ளவனை வெளுத்து வாங்கினா தான் சரிபட்டுவருவான் இது போர்கிஸ்தான் இம்ரான் மீது ஆணை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை