உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 25,000 கி.மீ., நெடுஞ்சாலைகள் நான்கு வழி சாலைகளாக மாற்றம் லோக்சபாவில் அமைச்சர் கட்கரி தகவல்

25,000 கி.மீ., நெடுஞ்சாலைகள் நான்கு வழி சாலைகளாக மாற்றம் லோக்சபாவில் அமைச்சர் கட்கரி தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''நாட்டின் 25,000 கி.மீ., நெடுஞ்சாலைகள், 10 லட்சம் கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச் சாலைகளாக மாற்றப்படுகின்றன. இதனால், சாலை விபத்துகள் பெருமளவு குறையும்,'' என லோக்சபாவில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.லோக்சபாவில் நேற்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது:நம் நாட்டில் 25,000 கி.மீ., நெடுஞ்சாலைகளை, 10 லட்சம் கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச் சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இன்னும் இரண்டாண்டுகளில் அந்த திட்டம் முடிவடையும் என நம்புகிறோம்.அரசின் இந்த முன்னுரிமை சாலைத் திட்டங்களால், நாட்டின் சாலைகளில் நடக்கும் விபத்துகள் வெகுவாக குறையும்.ஜம்மு - காஷ்மீரில் மட்டும் 2 லட்சம் கோடி ரூபாய் செலவில் சாலைப் பணிகள் நடக்கின்றன. 105 சுரங்க பாதைகள் அமைக்கப்படுகின்றன.குறிப்பாக, ஜோசிலா என்ற இடத்தில் கட்டப்பட்டு வரும் சுரங்க சாலையை, அனைத்து எம்.பி.,க்களும் ஒரு முறை சென்று பார்க்க வேண்டும். பொறியியல் துறையின் அதிசயமாக விளங்கும், ஆசியாவிலேயே மிக நீண்ட இந்த சுரங்க சாலை, ஜீரோ வெப்பநிலைக்கும் கீழான பகுதியில் அமைந்துஉள்ளது. 12,000 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டுள்ள இந்த சுரங்க சாலை, 5,500 கோடி ரூபாய் செலவில் நிறைவடைய உள்ளது.ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை பணி முடிவடையும் போது, ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு செல்லும் பயண நேரம், இப்போதைய ஏழு மணி நேரத்திலிருந்து, மூன்றரை மணி நேரமாகக் குறையும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி