உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ம.பி,:25 நாளில் 25 ஆயிரம் இறைச்சி கடைகள் மூடல்

ம.பி,:25 நாளில் 25 ஆயிரம் இறைச்சி கடைகள் மூடல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: ம.பி.,யில் கடந்த 25 நாளில் 25 ஆயிரம் இறைச்சி கடைகள் மூடப்பட்டு உள்ளதாக முதல்வர் மோகன்யாதவ் கூறி உள்ளார்.ம.பியில் கடந்த ஆண்டு நவ.,-ல் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு டிசம்பரில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.இதில் பா.ஜ., அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. முதல்வராக மோகன்யாதவ் பதவியேற்றார். பதவியேற்ற உடனே பொது இடங்களில் திறந்தவெளியில் இறைச்சி கடைகளை நடத்தக்கூடாது என உத்தரவிட்டார். இது குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்தன.இந்நிலையில் விழா ஒன்றில் 218 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 187 வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவர் பேசுகையில் மாநிலத்தில் வளர்ச்சி பணிகளில் எந்த ஒரு சமரசத்திற்கும் இடம் கிடையாது. கடந்த 13-ம் தேதி முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் பிறப்பித்த முதல் உத்தரவில் பொது இடங்களில் திறந்தவெளியில் இறைச்சி விற்க கூடாது எனவும் மீறினால் தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன் படி கடந்த 25 நாளில் பொது இடங்களில் திறந்த வெளியில் இறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக 25 ஆயிரம் கடைகள் மூடப்பட்டு உள்ளது. வரும் மகரசங்கராந்தி பண்டிகை மகளிர்க்கு அதிகாரம் அளிக்கும் தினமாக கொண்டாடப்படும் என முதல்வர் மோகன்யாதவ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Indian
ஜன 08, 2024 16:36

உயிருள்ள கொசுக்களை சாகடிக்கிறார்கள்


beindian
ஜன 08, 2024 09:49

கடைசிவரைக்கும் இவனுங்க ஆடு மாடு போல் இலைதலைகளை மட்டும் தின்று உயிர் வாழவேண்டியதுதான்


Pandi Muni
ஜன 08, 2024 11:53

அவன் இலை தழைகளை தின்னுவான் நீ


Senthoora
ஜன 08, 2024 16:20

மலேசியாவில் எதை வேண்டுமானாலும் நீங்க


Sampath Kumar
ஜன 08, 2024 09:22

இதுக்கு பேரு சாதனையா ? ஓழுங்க லைசென்ஸ் வாங்கி கடை நாட்யஹா அனுமதி முதலே கொடுத்து இருக்கணும் அனால் இப்போ வந்து தும்பை விட்டு வாலி பிடித்த காதலியாக உள்ளது மூடின இடத்தில என்ன வைக்கப்போறிங்க பார்ப்பு கடிய அல்லது ணெய் கடைய


வெகுளி
ஜன 08, 2024 00:03

சரியான முறையில் அனுமதி பெற்ற இறைச்சி வியாபார நிலையங்களை அமையுங்கள்...


kijan
ஜன 07, 2024 23:48

ஒரு நடை திருவண்ணாமலை பக்கம் வந்துவிட்டு போக முடியுமா ..... மோகன் யாதவ் சார் ?


கனோஜ் ஆங்ரே
ஜன 08, 2024 11:49

திருவண்ணாமலை...ல வாழ்றவனுங்களெல்லாம் மனுஷங்க இல்லையா....? அந்த திருவண்ணாமலை கோவிலை கட்டிய சம்புவரையரே அசைவர்தான்... அத்துடன், அக்கோவிலை மேம்படுத்தி ராஜகோபுரத்தை கட்டியது கிருஷ்ணதேவராயர், அவரும் அசைவ பிரியர்தான்...? போறப் போக்கப் பார்த்தா தமிழ்நாட்ட சன்னியாசிகள் மடம் ஆக்கிடுவீங்க போலிருக்கே....?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை