உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 25 ஆயிரம் மேற்குவங்க ஆசிரியர்கள் பணிநீக்கம்; உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

25 ஆயிரம் மேற்குவங்க ஆசிரியர்கள் பணிநீக்கம்; உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மேற்கு வங்கத்தில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட 25 ஆயிரம் ஆசிரியர்களின் நியமனத்தை கோல்கட்டா உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அந்த உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து விசாரித்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jqeu9e3t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பான வழக்கை விசாரித்த கோல்கட்டா உயர்நீதிமன்றம், ஆசிரியர்கள் 25,753 பேர் பணி நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் நான்கு வாரங்களுக்குள் அவர்களின் சம்பளத்தை 12 சதவீதம் வட்டியுடன் திருப்பித் தர வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதையடுத்து மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. விசாரணை முடிவில், கோல்கட்டா உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி பி.வி.சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, சட்டவிரோதமாக நடந்த மோசடி நடைமுறைகளின் விளைவாக நியமனங்கள் நடந்ததால் அவை மோசடிக்கு சமம் என தெரிவித்துள்ளது.முதல்வர் மம்தா பேட்டிஇந்த தீர்ப்பு குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: எங்கள் வழக்கறிஞர்கள் தீர்ப்பு குறித்து முக்கிய ஆலோசனை நடத்துவார்கள்.பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மனச்சோர்வடைந்துள்ளனர் என்பது எனக்குத் தெரியும். ஏப்ரல் 7ம் தேதி நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் அவர்களைச் சந்திப்பேன்.மனிதாபிமான அடிப்படையில் நான் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறேன். இந்த நடவடிக்கைக்காக, பா. ஜ, என்னை சிறைக்கு கூட அனுப்பலாம். நான் அதற்கும் தயாராக இருக்கிறேன். ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) ஒரு தன்னாட்சி அமைப்பு. அரசாங்கமாக, அவர்களின் பணிகளில் நாங்கள் தலையிட மாட்டோம். அவர்கள் (பா. ஜ.,) ஏன் எப்போதும் மேற்கு வங்கத்தை குறிவைக்கிறார்கள்? நான் மேற்கு வங்கத்தில் பிறந்தேன். பா.ஜ., மற்றும் மத்திய அரசின் நோக்கம் எனக்குத் தெரியும். கிட்டத்தட்ட 25 ஆயிரம் ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தவறு செய்த குற்றவாளிகள் அல்ல' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Easu
ஏப் 03, 2025 19:15

தீர்ப்பு திருப்தி அளிப்பதாக உள்ளது தவறு யார் செய்யினும் தகுந்த தண்டனை நிச்சயம் என்றால் குற்றச்செயல் ஓரளவு குறைய வாய்ப்பு உள்ளது


ravi
ஏப் 03, 2025 18:50

வேலை செய்த நாள்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்த்தை மட்டும் வாபஸ் பெற்று பணீ நீக்கம் கொடுக்கலாம்


தத்வமசி
ஏப் 03, 2025 17:55

என்ன வங்கப் புலி மியாவ் என்று கத்துகிறது.


ஆரூர் ரங்
ஏப் 03, 2025 17:42

ஆனால் இதேபோல பணி நியமனத்தில் முறைகேடு செய்த செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கொடுக்கச்சொல்லி அழுத்தம் யாருடைய தப்பு?


Balamurugan Sangilimuthu
ஏப் 03, 2025 17:35

மமதை கூறுவது contempt of court, supreme court ஆள், குற்றவாளிகல் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டவர்களை எப்படி இவர் குற்றமற்றவர்கள் என்று கூறலாம். மேலும் இது BJP செயல் என்று கூறியுள்ளார். supreme court தானாக முன் வந்து இவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.


Rajarajan
ஏப் 03, 2025 17:34

இங்க புதிய ஓய்வு திட்டத்துக்கு சம்மதம் சொல்லி கையெழுத்து போட்டு வேலைக்கு சேந்துட்டு, இப்போ அடாவடி பண்ற அரசு ஊழியர்களை என்ன பண்ணலாம் யுவர் ஹானர் ??


பெரிய ராசு
ஏப் 03, 2025 22:40

இதே நீ அரசு ஊழியரா இருந்த மொதல் ஆளா கொடிப்பிடிச்சு கோசம் போடுவதே , முடிஞ்சா நல்லா படிச்சு அரசாங்க உத்தியோகம் வாங்கு...வயித்தெரிச்சல் பட்டு சாகாதே


Nada Rajan
ஏப் 03, 2025 17:32

மேற்குவங்கம் ஊழல் பேர்வழி மாநிலம்.. அங்கு அரசியலில் இதெல்லாம் சாதாரணம் அப்பா


GMM
ஏப் 03, 2025 17:29

25000 ஆசிரியர்கள் பணி நீக்கம் உயர், உச்ச நீதிமன்றம் உறுதி. சில லச்சம் லஞ்சம் கொடுத்து தமிழகம் போல் வேலையில் சேர்ந்து இருப்பர். செந்தில் மீது மாடல் புகார் . ? சரி சம்பளம் 12 சதவீதம் வட்டி திரும்பி தர உத்தரவு. ஒரு குற்றத்திற்கு சில தண்டனை. குற்றம் குறையும். மேலும் அலுவலர்கள் மீதும் சட்ட மருத்துவ சிகிச்சை தேவை. மம்தா அக்கா அரசியலை ஏன் உள்ளே புகுத்துகிறார். ? கெஜ்ரிவாலுக்கு அடுத்த சட்ட சிகிச்சை மம்தாவுக்கா அல்லது சர்வாதிகாரிக்கா ?


புதிய வீடியோ